’பேரு பெத்த பேரு தாக நீலு லேது’ கேட்டுக்கேட்டு புளித்துப்போன பழமொழிதான் என்றாலும் ‘ஐ’ த பொய் படத்தில் சமீபகாலமாக புகைந்துகொண்டிருக்கும் ஒரு செய்திக்கு இதைவிட பொருத்தமான பழமொழி வேறொன்று இருந்துவிட முடியாது.
150 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக புழுகப்படும் இப்படத்தில் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாகவே சம்பளம் தரப்படவில்லையாம்.
ஷங்கரிடம் சம்பளம் கேட்டால் அவரது மேனேஜர் விமல்,’ தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேளுங்கள். அவர் டைரக்டருக்கே ஏகப்பட்ட சம்பள பாக்கி வைத்திருக்கிறார்’ என்றும் தயாரிப்பாளரிடம் கேட்டால், அவர் உதவி இயக்குநர்களிடம் ‘வள்’ என்று விழுவதுமாக கடந்த மூன்று மாதங்கள் கடந்து போயிருக்கின்றன.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் ஓப்பனாகவே கமெண்ட் அடித்துள்ள ஷங்கரின் உதவி இயக்குநர் ஒருவர் , ‘ஆஸ்கார் விருதைக்கூட சுலபமாக வாங்கிவிடலாம் போல, ஆனால் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் சம்பளம் வாங்குவதற்குள் தாவு தீர்ந்துபோய் விடுகிறது’ என்று கமெண்ட் அடித்துள்ளார்.
எத்தனை கோடியில் படம் எடுத்தாலும் உதவி இயக்குநர்களை பட்டினி போட்டுப்பார்ப்பதில் இன்பம் அடையும் இவர்களின் மனோநிலை என்றுதான் மாறுமோ?’