சில தலைப்புகள் ‘அடடா படத்துல ஏதோ சம்திங் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்போல இருக்கே’ என்று வசீகரிக்கக்கூடியவை. அப்படி சமீபத்திய வசீகரிப்பு தலைப்பு இந்த ‘அப்புச்சி கிராமம்’.
தெலுங்கில் ஒரு படம் இயக்கியிருந்தாலும் தமிழுக்கு அறிமுக இயக்குநர்தான் இந்தப்படத்தை இயக்கிருக்கும் ஆனந்த்.
படத்தின் கதை?
அப்புச்சி கிராமம், ஒரு ஜமீன்தாரின் இரு வாரிசுகள் எதற்கெடுத்தாலும் அடித்துக்கொண்டு மக்களை நிம்மதியாக வாழவிடாத கிராமம். மனைவியின் சொல்கேளாமல் சதா குடித்துக்கொண்டிருப்பவர், ஏகத்துக்கும் சொத்து சேர்த்து மனைவி பிள்ளையை அனுபவிக்கவிடாமல் கஞ்[சா]சத்தனம் பண்ணும் கருப்பு,பண்ணையாரின் மகளைக்காதலிக்கும் டிரைவர், இப்படி வில்லேஜ் சப்ஜெக்ட்கள் அத்தனையிலும் பார்த்துச்சச்லித்த ‘க்ளிஷே’ கேரக்டர்கள் நிறைந்த கிராமம்.
அந்த ஊருக்கு வெளியே மெயின் பிக்ஷருக்கு முன் காட்டப்படும் ட்ரெயிலர் போல ஒரு எரிகல் வந்து விழுகிறது. அடுத்து இன்னும் சில தினங்களில் பேரழிவை உண்டு பண்ணும் பயங்கர விண்கற்கள் விழப்போவதாக விஞ்ஞானிகள் கணித்து ஊர்மக்களை கிராமத்தை காலி செய்யச்சொலும்போது செத்தாலும் சொந்தமண்ணில்தான் சாவோம்’ என்று செண்டிமெண்ட் பேசி நெஞ்சை நக்குகிறார்கள்.
விண்கற்கள் விழுவதற்கு முந்தைய இரவில் அவ்வூர் பண்ணையாரின் வாரிசுகள் தொடங்கி, குடிகாரர், கஞ்சன் உட்பட மொத்த ஜனமும் திருந்தி நல்லவர்களாக மாற,, இரண்டு காதல் ஜோடிகளின் காதல் அங்கீகரிக்கப்பட சர்வமும் சுபம்.
இயக்குநர் ஆனந்த் தன் வீட்டுப் பரணில் கண்டிப்பாக முன்னூறுக்கும் மேற்பட்ட கதைகள் வைத்திருப்பவராக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் இப்படி ஒரே படத்தில் முப்பது கதைகளை வழங்கும் பெருந்தன்மை வாய்த்திருக்காது.[ அட போங்க சார் ஒரு படத்துல ஒரு கதைதான் சொல்லோனும்].
படத்தில் ஹீரோக்கள் ஹீரோயின்கள் தவிர்த்து நட்சத்திரப்பட்டாளங்களுக்கு பஞ்சமில்லை. நாசர், ஜீ.வி.குமார், ஜோ மல்லூரி, கிட்டி,கஞ்சாக்கருப்பு, கும்கி ஜோஸப், சிங்கம்புலி, கரடி என்று பெருங்கூட்டம். அனைவரும் சிறப்பாக கொடுத்த காசுக்கு கூவியிருக்கிறார்கள்.
ஹீரோக்களாக வரும் ரெண்டு பொடிப்பசங்களையும் லைட்டாக பட்டி பார்த்து டிங்கரிங் செய்தால் தேறும் வாய்ப்புண்டு.
ஹீரோயின்களில் சுவாசிகா கொஞ்சம் சுமாரான அக்காவாக இருக்க, கண்களால்ஹைக்கூ எழுதும் ரெண்டாவது ஹீரோயின் அனுஷா பக்கா.
பாடல்கள் பரிதாபமாக இருந்தாலும், பின்னணி இசையில் ஆங்காங்கே குஷால் படுத்தியிருக்கிறார் விஷால் சந்திரசேகர்.
மொத்தத்தில்….இயக்குநர் ஆனந்த் ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டமாய், எக்கச்சக்க சமாச்சாரங்களை கலந்துகட்டி வழங்கியிருப்பதால், ’அப்புச்சி கிராமத்தை கிராமிய,சயின்ஸ்ஃபிக்ஸாய,லவ்,செண்டிமெண்டல்,குடும்பச்சித்திரம் என்று கொள்ளலாம்.