இந்த வருடம் நிறைவுறப்போகும் இந்த மாதத்தில் தமிழ்ச் சினிமாவில் சலசலப்பை உண்டு பண்ணிய இரண்டு படங்கள் வெளிவந்த இந்த வருடத்தை பின்னோக்கிப் பார்ப்போம். அவை ‘இனம்’ மற்றும் ‘புலிப்பார்வை’.

தமிழனின் ஈழப் போராட்டத்தை பல்வேறு வகைகளிலும் நசுக்கிய சிங்கள இனவாதிகள் அதை தமிழ்நாட்டிலும் நசுக்க பல்வேறு விஷயங்களை மறைமுகமாகக் கையாளுகிறார்கள். தமிழ்நாட்டில் சிங்களர்கள் மறைமுகமாகச் செய்யும் நயவஞ்சக விஷயங்களுக்குத் துணைபோவதில் மலையாளிகளும், பிராமண சாதியிலுள்ளவர்களும் முண்ணணியில் இருந்து வந்திருக்கிறார்கள். தொடர்ந்து அந்த மனோபாவத்தை வளர்த்தும் வருகிறார்கள். இது ஏன் என்பது கவனமாக ஆராயப்படவேண்டிய விடயமாகும்.

தமிழரின் இனப் போராட்டத்துக்கு எதிராக மறைமுக பங்காற்றுவது இந்திய அரசும், தமிழருக்கு எதிரான அதன் வெளியுறவுக் கொள்கைகளும் ஆகும். இந்த வட்டத்தில் தான் இந்திய மற்றும் தமிழக அரசின் தணிக்கைத் துறையும் வருகிறது.

அரசு அதிகாரம், வட இந்தியர், மலையாளிகள் போன்ற மற்ற இனத்தவர் தமிழினத்தின் மீது கொள்ளும் துவேஷம் தமிழினத்தை தமிழ்நாட்டிலேயே கேவலப்படுத்தும் படம் எடுக்கும் வரை போய் நிற்கிறது.

தமிழ்ச் சினிமாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பினாமிகளாக முதலீடு செய்து தயாரிப்பாளர்களாக உள்ளே நுழைகிறார்கள் சிங்கள இனக் கைக்கூலிகள்.  இவர்களின் தயாரிப்பில் சாதரண கமர்ஷியல் படங்கள் பல எடுக்கப்பட்டுள்ளன. சேரன், கரு. பழனியப்பன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றோர் உதாரணங்கள். புலிப் பார்வையில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை ஒரு குழநதைப் போராளி போல சித்தரித்து எடுத்ததை பலர் ஹீரோயிசம் என்று ஏமாந்து பார்த்தனர். உண்மையை திரித்த விஷயம் அதில் மறைந்து போனது.

ஒரு மாற்றுக் கருத்துக்கு இங்கே இடமில்லையா என்று உரிமைக் கூச்சலிடும் சிலர், அதே மாற்றுக் கருத்து இங்கே உள்ள இயக்குனர்களால் எடுக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கை, தேன்கூடு,  இயக்குனர் இகோரின் படம் போன்ற ஈழப் பிரச்சனையை நேராகப் பேசிய படங்களை எல்லாம் தணிக்கையிலேயே கழித்துவிட்டு இதுபோன்ற பாடாவதிகளை மட்டும் வெளியிடும் தந்திரத்தைப் பற்றிப் பேச முன்வருவதில்லை.

இனம் படத்தில் தெளிக்கப்பட்டுள்ள விஷம் பற்றிய காணொளி கீழே..

https://www.youtube.com/watch?v=258UYtUIGK8