இது பகுத்தறிவு சிங்கங்கள் ஆன்மீகத்துக்குத் தாவும் வாரம் போலிருக்கிறது. அண்ணன் சீமான் பழனி சென்று நம் முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்திருப்பதைத்தொடர்ந்து, படங்களில் பகுத்தறிவு பேசி தன்னை பெரியாரின் நேரடிப்பேரன் போல் காட்டிக்கொண்ட விவேக் தனது உதவியாளர் செல்மோகனுடன் திருப்பதியில் போய் மொட்டை போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.
கைவசம் அவ்வளவாய் படங்கள் இல்லை. அதிகம் எதிர்பார்த்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் அவர் நடித்த அதிக காட்சிகள் வெட்டப்பட்டு டம்மி ஆக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் காமெடி நடிகர் மயில்சாமி விவேக்கை தொடர்புகொண்டு, ‘நான் வேண்ணா திருப்பதி வரைக்கும் போய் உங்களுக்காக வேண்டிக்கவா பாஸ்?’ என்று கேட்டாராம். அதற்கு விவேக் ‘நீ என் செலவுல போய்ட்டு, திருப்பதியில லட்டுக்குப்பதில் இப்ப இதைத்தான் குடுக்கிறாங்கன்னு ஜாங்கிரியக் கொண்டுவந்து தருவ. எத்தனை வாட்டிடா ஏமாறுறது. இந்த வாட்டி நானே போய் நேரடியா வேண்டிக்கிறேன்’ என்றுதான் கிளம்பிப்போனாராம்.
ராஜபக்ஷேவுக்கு அப்புறம் திருப்பதி போனவர்கள் எல்லாம் வரிசையாய் புட்டுக்கிட்டே வருவதை விவேக் கவனிக்கவில்லை போலும்.