வைகைப் புயல் தான் தயாரித்து நடித்த ‘இந்திரலோகத்தில்..அழகப்பன்’ சரியாகப் போகாததால் மீண்டும் திரையுலகில் அடுத்த ரவுண்டு வர முடியாத நிலையிலேயே இருக்கிறார். மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க முயன்று வரும் வடிவேல் தற்போது ‘எலி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்து வருபவர் ‘போய்யா’ புகழ் சதா.
1970 காலகட்டத்தை பிண்ணணியாகக் கொண்ட ‘எலி’ படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன் கூறுகையில்.. “படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்துவிட்டது. இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி. அதில் சதாவுக்கு ஒரு பாடல் காட்சி படமாக்கிக் கொண்டுள்ளோம். பின்னர் க்ளைமேக்ஸ் இறுதிக் கட்ட காட்சி. ஏப்ரலில் பாடல்கள் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மே மாதம் படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
எலிகேசியாக இருக்கும் வடிவேல் மீண்டும் புலிகேசியாவாரா ? சினிமா மார்க்கெட்டில் இடம் பிடிப்பாரா? வரட்டும். இன்னுமொரு ரவுண்ட் வரட்டும்!!