அண்மையில் வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி மோகன்ராஜாக நடித்திருப்பவர்தான் இந்த விகே..இவரது முழுப்பெயர் வினோத் குமார்.இவர் துபாயில் வசிக்கிறார்.
இனி அவருடன் பேசலாமே….
உங்கள் அறிமுகம் பற்றி?
நான் பிறந்தது வளர்ந்தது கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு கிராமம். பெற்றோருக்கு இரும்பு உருக்காலையில் வேலை.எனவே குடும்பம் ஜார்கண்ட் மாநிலம் இடம் பெயர்ந்தது. படிப்பு அங்கு தொடர்ந்து எம் பிஏ முடித்து குடும்பத்து விருப்பத்துக்காக வேலைக்குப் போனேன். அப்படி வேலைக்குப் போன நாடுதான் துபாய். அங்கு ‘காக்ஸ்’ என்கிற பயண நிறுவனத்தில் வேலை. பழம்பெரும் நிறுவனம் அது .எனக்கு அங்கே நல்ல வேலை ‘கிங்ஸ்’ நிறுவனத்திலும் உயர் பொறுப்பை வகிக்கிறேன்.
படிப்பு வேலை என்றிருந்த நீங்கள் சினிமாவில் எப்படி நுழைந்தீர்கள்?
எனக்கு சிறுவயது முதல் கலை, கிரிக்கெட்என்கிற இரண்டிலும் ஆர்வம். ஆடல், பாடல், இசை, கதை, கவிதை, நாடகம் என எல்லாமும் பிடிக்கும்.
பள்ளி நாட்களில் சிறிதும் கூச்சப் படாமல் மேடையேறி நடித்ததுண்டு. பிறகு நாடகக் குழுக்களில் பங்குபெற்று நவீனநாடகங்களில், வீதி நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கிறேன். நாடகத்தை இயக்கியும் கூட இருக்கிறேன்..
தபலா, டிரம்ஸ் வாசிப்பேன். இசைக்குழுவில் வாசித்ததுண்டு.டில்லியில்இருந்த போது சில மாடலிங்கும் செய்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட நான் எல்லா ஆர்வத்தையும் மனதிற்குள் புதைத்துக் கொண்டு துபாயில் வேலை பார்த்தேன். அங்கு ‘மணல்நகரம்’ படக்குழுவினர் வந்தனர். நடிகர்- இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் வசந்த் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இயக்குநர்அங்குள்ள நடிகர்களை தேர்வு செய்த போது என்னைப் பிடித்துப் போய் இந்த பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.
‘மணல்நகரம்’ படத்தில் நடித்த அனுபவம் எப்படி?
அது புதுமையான அனுபவம்தான்.இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாரும் நண்பர்களாகி விட்டனர் எனவே இலகுவாக இருந்தது. நான் கேமரா முன்பு நடித்தது போக மீதி நேரத்தில் எல்லாவற்றையும் உற்றுப் பார்ப்பேன் ;கவனிப்பேன். அப்போது நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் சொல்கிற பிற வேலைகளையும் செய்து அதன் மூலமும் கற்றுக் கொண்டேன்.
படம் வெளியான பிறகு எப்படி இருந்த்து ..?
படம் பார்த்த பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. ஏதாவது ஒரு படத்திலாவது ஏதாவது ஒருகாட்சியிலாவது நடிக்க மாட்டோமா என்று கனவு கண்டதுண்டு. முழுநீள பாத்திரம் கிடைத்தது மகிழ்ச்சிதான். பத்திரிகை, ஊடகங்களில் என் நடிப்பைப் பாராட்டியுள்ளதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.படம் பார்த்து பலரும் பாராட்டினர். குறிப்பாக என் பெற்றோர், மனைவி பாராட்டிய போது பெருமையாக இருந்தது.
அடுத்து உங்கள் திட்டம்?
நான் துபாயிலிருந்தாலும் அவ்வப் போது சென்னை வருகிறேன். விடுமுறைகளை அனுசரித்து படங்களில் நடிக்க ஆசை. தமிழில் 2 இந்தியில் 1 எனப் பட வாய்ப்புகள் வந்துள்ளன. பாசிடிவா நெகடிவா எதுவாக இருந்தாலும் எபெக்டிவா நடிக்கவேண்டும் இதுவேஎன்ஆசை..