அப்பா ஒரு இயக்குநர் என்பதாலோ என்னவோ உதவி இயக்குநர்கள் மீது அநியாயத்துக்கு அன்பைப்பொழிகிறார்கள் அகத்தியனின் மகள்கள்.
வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் விஜயலட்சுமி. இவர் பிரபல இயக்குனரான அகத்தியனின் இளைய மகள். அதைத் தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, என சில படங்களில் நடித்தார். அவருடைய நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெண்ணிலா வீடு படம் ரிலீசானது.
ஆரம்பத்தில் தொடர்ந்து ஒருசில ஹிட் படங்களைக் கொடுத்த விஜயலட்சுமிக்கும் இப்போது அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. இதனால் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அவர் உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரை கிட்டத்தட்ட 6 வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்தார். இருவரது காதலுக்கும் டைரக்டர் அகத்தியன் சம்மதம் தெரிவிக்கவே வரும் செப்டம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு சினிமா தயாரிப்பாளராக திட்டமிட்டு இருக்கிறார் விஜயலட்சுமி.
விஜயலட்சுமியின் அக்கா கார்த்திகாவும் தனது அப்பாவிடம் உதவி இயக்குனராக இருந்த திரு என்பவரைத் தான் காதலித்து திருமணம் செய்தார். இப்போது அவர் வழியிலேயே விஜயலட்சுமியும் ஒரு உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்யப்போகிறார். ஃபிரோஸ் முகமது விரைவில் கிருஷ்ணாவை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி இயக்குநர்களை மதித்து கரம் நீட்டிய சகோதரிகள் இருவரும் பல்லாண்டு வாழ்க.