எவ்வளவு அதிகமாகச் சொன்னாலும் 26 வயதுக்கு மேல் சொல்லமுடியாத ஜோதிகா 36 வயது குடும்பத் தலைவி. வருமான வரித்துறை ஆபீஸ் இல் பணிபுரிகிறார்.  கணவர் ரகுமான் சென்னை ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் அறிவிப்பாளர்.

சராசரி குடும்பத் தலைவியாக டிவி சீரியல்கள், ப்யூட்டி பார்லோர் என்று வாழும் ஜோதிகாவுக்கு ஒரு பிரச்னை வருகிறது ரகுமானாலேயே.  அதை சமாளித்து வர திணறும்போது நாட்டின் முதல் குடிமகனையே  சந்திக்கும் வாய்ப்பு மகளால் கிடைக்கிறது. அதையும் சொதப்புகிறார் ஜோதிகா.   ரகுமான் தனது மகளுடன்  நியூசிலாந்து சென்று விடுகிறார்.

36 வயதானதால் விசா ரிஜெக்ட் செய்யப்படும் ஜோதிகா தனித்து விடப்படுகிறார்.  கணவன், மகள் என்று எல்லாராலும் ஜோதிகா வெறுக்கப்படுகிறார்.   பின்னர் அவளது பள்ளிக்கால தோழியான சுசன் வந்து அவளுக்குள் ஒளிந்திருக்கும் சாம்பியன் ஐ தட்டி எழுப்புகிறார்.  சாம்பியன் ஆனா ஜோதிகா எல்லாரும் மூக்கில் விரல் வைக்கும் படியான ஒரு முயற்சி செய்து மீண்டும் தனது குடும்பத்துடன் இணைகிறார்.

‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்கிற மலையாளப்   படத்தின் ரீமேக் தான் இந்த 36 வயதினிலே.  படத்திலும் மலையாள வாசனை தூக்கலாக இருக்கிறது. படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை நின்று விளையாடுபவர் ஜோ தான்.  மிகச் சரியாக தனது பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். மயக்கம் போடும் போதும் எல்லோரும் அவரை கைவிட்ட கணத்தில் குமுறும் போதும் அலட்சியமாய் பேசும் மகளிடம் அன்பாக உருகும் இடத்திலும் ஜோ பளிச்சிடுகிறார். ஆனாலும் மேக்கப் பளிச்சென்று போட்டு வைத்திருப்பதால் அவரது நடிப்பு பாதிதான் திரையில் தெரிகிறது.

ஜோவுக்கு அடுத்தபடியாக படத்தில் ‘பளிச்’ என்பவை வசனங்கள்.  ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம்(identity) இருக்கிறது. தியாகமே உருவான குடும்பப் பெண்ணானாலும் கூட அவருக்கும் ஒரு இடேண்டிட்டி(identity) வேண்டும். ஜோவுக்கும் அவரது 13 வயது மகளுக்குமிடையேயான உரையாடல். பேஸ் புக் சாடல் என்று படம் முழுதும் வசனங்கள் பளிச்சிடுகின்றன.  வசனத்தில் பளிச்சிட்ட இயக்குனர் ரோஷன் ஆண்ரூஸ் இயக்கத்தில் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார்.  ரகுமான் சுயநலம் கொண்ட கணவனாக வருகிறார். அவரைத் தவிர வேறு யாருக்கும் சிறந்த நடிப்பை வழங்கும் வாய்ப்பு படத்தில் இல்லை.  ஒளிப்பதிவு திவாகரன், இசை சந்தோஷ் நாராயணன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்கள். வாடி ராசாத்தி பாடல் ஆடியோ ரிலீஸ் செய்த போதே ஹிட் ஆனது.  படத்தில் ஜோவின் மிகபெரும் மனமாற்றத்துக்கான காரணம், காட்சிகள் வலுவாக காட்டப்படவில்லை.

படத்தின் முக்கியமான மெசேஜ் ஆர்கானிக் விவசாயம் பற்றியது. நாம் அன்றாடம் வாங்கி சாப்பிடும் காய்கறிகள் அனைத்தும் கெமிகல் உரங்களால் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகி இருப்பதையும் அதை  விடுத்து ஆர்கானிக் காய்கறி இயற்கையாக நல்ல சத்துக்கள் கொண்டது என்பதையும் பாடம் எடுத்து சொல்லியிருக்கிறார். அத்தோடு மொட்டை மாடித் தோட்டம் எனப்படும் ‘டெர்ரஸ் கார்டேனிங்'(terrace gardening) பற்றியும் விழிப்புணர்வு உன்டாக்கியிருக்கிறார் இயக்குனர் ரோஷன்.

ஜோவுக்காக, லைட்டான ஹியுமருக்காக, பேமிலி செண்டிமேண்டுக்காக படத்தை ஒரு தடவை குடும்பத்தோட ஜாலியா பாக்கலாம்.

Related Images: