பிரிட்டனைச் சேர்ந்த ஈ.எல்.ஜேம்ஸ் எனும் நாவாலாசிரியை எழுதிய ’50 ஷேட்ஸ் ஆப் கிரே’ (50 shades of Grey) என்கிற நாவல் மூன்று பாகங்களாக வெளிவந்து உலகம் முழுதும் இதுவரை 12 கோடி புத்தகங்கள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. நாவல் 52 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நாவல் முழுக்க வரும் விலாவரியாக விவரிக்கப்படும் சூடான படுக்கையறைக் காட்சிகளும், கிளுகிளுப்பான வசனங்களும் தான் புத்தகம் இளசுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற முக்கிய காரணம்.
நாவலின் முக்கிய பாத்திரமான க்ரிஸ்டியன் கிரே ஒரு 27 வயது நிரம்பிய பிஸினெஸ் மேன். அவனுக்கும் கல்லூரி மாணவியான அனஸ்டேசியாவுக்கும் இடையேயான காம, காதல் களியாட்டங்கள் பற்றியதுதான் இந்த நாவல்.
வியாழனன்று வெளிவந்திருக்கும் இந்த மூன்று போக நாவலின் அடுத்த பாகமான ‘கிரே’ பரபரப்பான விற்பனையில் இருக்கிறது. இந்த நாவலில் காம களியாட்டங்களை நாவலின் பாத்திரமான கிரேயின் பார்வையிலேயே விவரித்திருக்கிறாராம் நாவலாசிரியை. அது போக ஒரு காதலையும் தேடுகிறார்கள் நாவலில்.