கரியப்பா, மானக் ஷாவுக்கு அடுத்து மார்ஷல் பட்டம் பெற்று, இன்றைய தேதிக்கு நடமாடும் நமது ராணுவத் தின் ஒரே பொக்கிஷம்..கலாமைவிட 12 வயது மூத்தவர்.. 1939 ஆண்டில் பணிக்கு சேர்ந்தது முதல், தாம் சுவாச மான விமானப்படை தளத்திற்கு, கலாம் உடல் கொண்டு வரப்பட்டதும் வீல்சேருக்கு தற்காலிக விடை கொடுத்து விட்டு அஞ்சலி செலுத்துகிறார் 96 வயது அர்ஜான் சிங்..

நாட்டை நேசிக்கிறவர்கள் என்றைக்குமே வியப்பின் அடையாளங்களாகவே உள்ளனர்…இந்த அர்ஜான் சிங், போர்களில் எத்தனை பேரை சுட்டு சாகடிச்சாரு தெரியுமான்னு யார்யாரெல்லாம் வரப்போறாங்கன்னு தெரியலையே..

முகநூலில் ஏழுமலைவெங்கடேசன் Elumalai Venaktesan

டாக்டர் அப்துல்கலாம் டி.ஆர்.டி.ஓ. வில் பணியாற்றிக் கொண்டு இருந்த போது, அங்கு உள்ள டிபன் லேப் என்ற பள்ளியில் இசை ஆசிரியராக கல்யாணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருமாறு டாக்டர் அப்துல் கலாமை அழைக்கச் செல்ல… அப்போது முதல் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்துல்கலாம் 1989 முதல் 1992 வரை கல்யாணியிடம் வீணை கற்றுக் கொண்டாராம். இதுகுறித்து தற்போது செய்தியாளர்களிடம் பேசியுள்ள வீணை ஆசிரியர் கல்யாணி,

“டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் வீணை கற்றுக் கொள்ள என்னைத் தேடி வந்தார். நான் நீங்கள் சொல்லி இருந்தால் நானே வந்து இருப்பேன் என்று கூறினேன். அதற்கு அப்துல் கலாம் குருவைத் தேடி தான் சிஷ்யன் வர வேண்டும் என்று கூறினார். அவரை விட நான் வயதில் சிறியவள். இருந்தாலும் எனக்கு அதிக மரியாதை கொடுத்தார்.பெரியவர்களுக்கு மரியாதை, குழந்தைகளிடம் அன்பு காட்டுதல் போன்றவை அவரிடம் இருந்துதான் கற்று கொள்ள வேண்டும். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டை கேட்டால் கடவுளிடம் பேசியது போல் உள்ளது என்று டாக்டர் அப்துல்கலாம் என்னிடம் அடிக்கடி சொல்வார். இசையை அவர் ரொம்ப நேசித்தார். நெருக்கடியான நேரத்தில் இசையை எடுத்துக் கொண்டார்” என  தற்போது டாக்டர் அப்துல்கலாம் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.