குழந்தைகள் அனாவசியத் தொல்லைகளாக தங்களின் ஆடம்பரப் பொருட்களை விட மதிப்பில்லாததாக பல அம்மாக்களாலேயே கருதப்படும் விஷயம் இந்த கன்சுயுமர் உலகத்தில் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இது நடந்தது சீனாவில் உள்ளா சீஜியான் மாகாணத்தில்.

தனது 3 வயது பையனை தனது பி.எம்.டபிள்யூ காரில் விட்டுவிட்டு அந்த சீன அம்மாவும், அப்பாவும் கடைக்குள் ஷாப்பிங் சென்றுள்ளனர். டிரைவிங் சீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்த 3 வயதுக் குழந்தை தற்செயலாக கார் கதவை மூடிவிட சாவியுடன் கார் உட்பக்கமாக மூடிக்கொண்டது. காரில் மாட்டிக்கொண்ட குழந்தை வீறிட்டு அலறியது. வெப்பமான சூழ்நிலையில் காரின் உள்ளே இன்னும் வெப்பம் கூடியது. தீயணைப்பு வீரர்களுக்கு சொல்லப்பட்டு அவர்கள் விரைந்து வந்தும் விட்டனர். குழந்தை பயத்தில் இருப்பதால் தாமதித்தால் அதற்கு ஏதேனும் பாதிப்பு வரலாம் என்று தெரியவந்தது.

அதற்குள் காரைச் சுற்றி பெரும் கூட்டமே கூடிவிட்டது. கார் சாவி உள்ளேயே மாட்டிக்கொண்டதால் காரின் கண்ணாடி ஜன்னலை உடைத்துத்தான் குழந்தையை வெளியே எடுக்கவேண்டும் என்று பரபரப்பாக தீயணைப்பு வீரர்கள் சொல்ல அந்த கூலான அம்மா சொன்னதாம் “ஐய்யைய்யோ.. வேண்டாம்.. வேண்டாம் காஸ்ட்லியான ஜன்னலையெல்லாம் உடைக்க வேண்டாம்.. மெக்கானிக்கை வரச்சொல்லியிருக்கிறோம் அவர் வரட்டும்.. வந்து மாத்துச்சாவி போட்டு திறக்கட்டும்” என்று.

படபடப்பாக வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த அம்மாவின் கார் பாசத்தில் கொடுத்த கூலான ரியாக்ஷனில் அப்படியே கையைப் பிசைந்தபடியே நின்று விட்டனர். சுற்றியிருந்த கூட்டத்திற்கு மெதுவே விஷயம் தெரிந்து ஆளாளுக்கு அந்த மம்மியை சத்தம் போட ஆரம்பித்ததும் தீயணைப்பு வீரர்கள் அந்த மம்மியிடம் நைஸாகப் பேசி ஜன்னலை உடைக்க பெர்மிஷன் வாங்கி உடைத்து ஒரு வழியாக குழந்தையை மீட்டார்களாம்.

போனவாரம் சீனாவில் ட்விட்டரில் இந்த மாடர்ன் மம்மியைத் தான் வறுத்துக் கொண்டிருந்தார்கள்.

Related Images: