மாரி` படம் முழுக்க மாறி மாறி தம் அடித்த தனுஷைக் கண்டித்து பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவரது மாமனார் ரஜினி முதல் அஜித், விஜய் போன்ற பெரும் நடிகர்கள் யாரும் தம்மடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பதை சுட்டிக்காட்டி தனுஷ்ஷூம் அது போன்று தம்மடிக்கும் காட்சிகளில் நடிக்காமல் இருக்க ‘வேண்டுகோள்’ விடுத்திருந்தார் அன்புமணி.
அவருடைய அறிக்கைக்கு பதலளித்த தனுஷ், `ஐயா அன்புமணி அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இனி நான் நடிக்கும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். `மாரி` படத்தில் தாதா கேரக்டர் என்பதால்தான் தம் அடிக்கவேண்டியிருந்தது. உண்மையில் எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை` என்று பணிவு காட்டியிருக்கிறார் தனுஷ்.
அன்புமணி ஐயா, அப்படியே கையோட, தனுஷ் படங்கள்ல சொந்தக்குரல்ல பாடுறதையும், போயட்டுங்குற பேர்ல பாட்டு எழுதி தமிழைப் பாடாப்படுத்துறதையும் கண்டிச்சி அறிக்கை விட்டீங்கன்னா பாதிக்கப்பட்டவங்க ஓட்டெல்லாம் உங்களுக்கு கன்ஃபர்ம்.