ஏற்கனவே சந்தையில் கூகுள் முதல் ஸையோமி வரை ரிஸ்ட் பேண்ட் எனப்படும் மணிக்கட்டுப் பட்டையை வெளிவிட்டிருக்கின்றன. இப்போது அந்த வரிசையில் புதிதாய் சேர்ந்திருப்பது மைக்ரோமக்ஸ். அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான யூ டெலிவென்ச்சுர் நிறுவனம் வரும் ஜூலை 29ம் தேதி யுபிட் பேண்ட் ஐ இந்தியச் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவருகிறது.

இதன் சிறப்பம்சங்கள் என்ன? இது ஒரு பிட்னெஸ் ட்ராக்கர். அதாவது உடல்நலம் கண்காணிக்கும் கருவி. இதிலிருக்கும் வளைந்த OLED திரை நாம் நடக்கும் காலடிகளை கணக்கிடும், செலவான கலோரிகள், நமது தூக்க அளவு போன்றவற்றையும் குறித்துவைக்கும். இது தவிர நமது போனுக்கு வரும் தகவல்களையும், போன்கால்களையும் பற்றி எச்சரிக்கை செய்யும். மேலும் நாம் சாப்பிடப்போகும் இ்ந்திய வகை உணவு ஒவ்வொன்றின் கலோரி அளவு பற்றிய தகவலையும் கொண்டுள்ளதால் நமது எடை, உணவின் கலோரி அளவு மற்றும் உடல் நலம் பற்றிய தகவல்களை எளிதில் கணக்கிடப்படுகிறது.

இதில் இருக்கும் ஹெல்திபைமி எனப்படும் மொபைல் ஆப் மூலும் யூ டெலிவென்ச்சுரின் துணை ஹெல்த்கேர் நிறுவனத்தின் கோச்சுகளுடன் உரையாட, நமது உடல்நலத்திற்கான ஆலோசனைகள் பெற, அவர்களால் தொடர்ந்து நம் உடல்நிலையை கவனித்து ஆலோசனை சொல்ல என்று பல விஷயங்களைச் செய்யமுடியும். இந்த ஆலோசனைக்கு 2 மாதத்திற்கு 1800 ரூபாய். வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்.

விற்பனை ஆரம்ப சலுகையாக ஹெல்திபைமி ஆலோசனை சேவையை முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகத் தர முடிவு செய்திருக்கிறது யூ டெலிவென்ச்சுர். இந்த யுபிட் பேண்டின் விலை ஆயிரம் ரூபாய்க்கு 1 ருபாய் கம்மி.

Related Images: