வீடியோ கான்பரன்சிங் தொலைபேசி அழைப்புக்கள் வரை இப்போது வந்துவிட்டாலும் பழைய வகையான அரட்டை ஆப்களுக்கு இன்னும் தேவை இருக்கிறது. யாஹூ பரீட்சார்த்த முயற்சியாக வெளிவிட்டிருக்கும் புதிய ‘ஐ போன் ஆப்’ ஹாங்காங் ஐ போன் ஆப் ஸ்டோர்களில் மட்டும் டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது.

இதன் சிறப்பம்சம் என்னவெனில் இது வழக்கமான டெக்ஸ்ட் சாட்டிங் எனப்படும் வார்த்தை உரையாடல்களுக்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான டெக்ஸ்ட் சாட்டிங் உடன் வீடியோவையும் சேர்த்து அனுப்ப முடியும். ஆனால் அதில் ஆடியோ இருக்காது. பதிலாக நீங்கள் டைப் செய்யும் வார்த்தைகள் அந்த வீடியோவில் காட்டப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது உணர்வுகளை உடனுக்குடன் எதிரே இருப்பவர் தெரிந்துகொள்ளமுடியும். அது வார்த்தை மற்றும் வீடியோவின் மூலம் மட்டுமே. ஒலி இல்லை.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வீடியோக்களை விரைவாக அனுப்பும் இந்த சாப்ட்வேர் முழுக்க முழுக்க உரையாடல்களையே மையமாகக் கொண்டுள்ளது. ஸ்கைப், வைபர் போல இதில் வீடியோ கால்கள் செய்யமுடியாது. மேலும் இது இருவரின் தனிப்பட்ட உரையாடலை மட்டும் அனுமதிக்கிறது. குரூப் சாட்டிங் வசதி இதில் கிடையாது. டைப் செய்வதை குறைத்துநமது முக உணர்வுகளையும் இணைத்து புதிய வகையிலான தனிப்பட்ட சாட்டிங் அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்கிறது யாஹூ நிறுவனம்.

ஒவ்வொரு பயனாளருக்கும் இதற்கென தனியே ஒரு யாஹூ அடையாள எண் (ID) கொடுக்கப்படும். நமது நண்பர்களை நமது போன்புக்கிலிருக்கும் அவர்களது போன் நம்பரை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம்.

Related Images: