சல்மான்கான் நடித்த ‘பஜ்ரங்கி பைஜன்’ என்கிற ஹிந்திப் படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த ஜூலை மாதம் உலகெங்கும் வெளியிடப்பட்டது. சிறுவயதில் பாகிஸ்தானுக்குப் போகும் ரயிலிலிருந்து தவறிய ஒரு வாய்பேசாத ஊமை பாகிஸ்தான் சிறுமியைப் பற்றிய கதைதான் பஜ்ரங்கி பைஜன். பஜ்ரங்கி பைஜன் என்கிற ஐயராக வரும் சல்மான்கான் அந்தப் பாகிஸ்தான் சிறுமியை அவளது குடும்பத்தினருடன் பாகிஸ்தானுக்குச் சென்று சேர்த்து வைப்பதுதான் கதை.

படம் வெளியான சில மாதங்களிலேயே நிஜமாகவே பாகிஸ்தானில் உல்டாவாக இந்த கதை நடந்திருப்பது தெரியவந்தது. பாகிஸ்தானில் காணாமல் போன ஒரு இந்தியச் சிறுமி கீதா என்பவரே அவர். அன்சார் பர்னி என்கிற முன்னாள் பாகிஸ்தான் மனிதஉரிமைகள் அமைச்சர் அவரது பெற்றோரை மீட்க இந்திய அரசுடன் பேசி முயற்சி செய்து வருகிறார்.

படத்தின் கதையை மிகவும் ஒத்திருக்கிறது அந்தப் பெண்ணின் வாழ்க்கை. கீதா என்கிற அந்தப் பெண் எட்டுவயதில் லாஹூர் ரயில் நிலையத்தில் போலீஸாரால் மீட்கப்பட்டார். படத்தில் நடந்தது போல பாகிஸ்தான் செல்லும் சம்ஜூதா எக்ஸ்பிரஸ்ஸில் தவறுதலாக ஏறி பாகிஸ்தான் சென்றுவிட்ட சிறுமி அவள். எதி பவுண்டேஷன் எனப்படும் இஸ்லாமிய தன்னார்வு நிறுவனத்தின் பாதுகாப்பில் கடந்த 14 வருடங்களாக இருக்கிறாள் கீதா.

தற்போது 23 வயதாகும் கீதாவுக்கு வாய்பேசமுடியாது. ஹிந்தி எழுதத் தெரியும். இந்திய வரைபடத்தைக் காட்டி அவரது குடும்பம் எங்கிருக்கிறது என்று கேட்டால் ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானாவை நோக்கி கைகாட்டுகிறார். அவருக்கு ஏழு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் இருந்திருக்கிறார்கள். அந்தத் தன்னார்வு நிறுவனத்தில் அவளுக்காக தனியாக வழிபடும் இடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதை கலர் கலரான இந்து தெய்வங்களின் படங்களை ஒட்டி அலங்கரித்து வைத்திருக்கிறார் கீதா. நிறுவனத்தின் தலைவர் பைசல் கீதாவுக்காக நேபாளத்திலிருந்து ஒரு விநாயகர் சிலை வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்.

கடந்த 3 வருடங்களாக இவரது பெற்றோரைத் தேட அன்சார் பர்னி அவரது புகைப்படம் மற்றும் வீடியோவோடு இந்தியா வந்து தேடிச் செல்கிறார். சென்ற வருடம் பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் கீதாவை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். அவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை. இப்போது பஜ்ரங்கி பைஜன் வெளியானதைத் தொடர்ந்து பேஸ்புக்கில் அவருக்காக பக்கம் ஏற்படுத்தப்பட்டு அவரது குடும்ப உறுப்பினர்களை தேடும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதைக் கேள்விப்பட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் ஹைகமிஷனர் ராகவனை கராச்சி சென்று தற்போது அங்கிருக்கும் கீதாவைச் சந்தித்து வர கேட்டுக் கொண்டுள்ளாராம்.

Related Images: