1. அமெரிக்காவில் நாள்தோறும் இணையத்தில் சுமார் 6 கோடியே 80 லட்சம் ஆபாசத் தேடல்கள் செய்யப்படுகின்றன. இது ஒரு நாளின் தேடலின் 25 சதவீதமாகும்.
2. ஆபாசத் தொழில் தான் உலகிலேயே மிகவும் பெரிய மற்றும் மிகவும் லாபகரமானத் தொழில். ஆபாசத் தொழில் ஹாலிவுட்டை விட அதிகமாக சம்பாதிக்கிறது.
3. 2010ல் உலகம் முழுதும் இணையத்தில் நடந்த தேடல்களில் 13 சதவீதம் காமம் சம்பந்தப்பட்ட விஷயங்களே.
4. இளம்வயதினர்-நடித்த-ஆபாசப்படங்கள் தான் இணைய ஆபாசத்தில் லேட்டஸ்ட் ட்ரண்ட்.
5. உலகிலேயே ஆபாசப்படங்களைத் தயாரிப்பதில் முதலிடம் வகிப்பது அமெரிக்கா. ஜெர்மனிக்கு இரண்டாமிடம். ஒரு வாரத்திற்கு சுமார் 400 புதிய ஆபாசப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
6. 2013ல் பிரிட்டனில் சமூக வலைத்தளம், ஷாப்பிங், செய்தித் தளங்கள், ஈமெயில், பைனான்ஸ், விளையாட்டு போன்றவற்றை மிஞ்சியது ஆபாச இணையதள விசிட்கள்.
7. உலகெங்கும் பெண்கள் ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் ஆண்களை விட விருப்பமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.
8. அமெரிக்காவில் 20 சதவீதம் பேர் வேலை செய்யுமிடத்தில் ஆபாசப் படங்கள் வீடியோக்களை பார்க்கிறார்கள்.
9. 10க்கு 7 இளைஞர்கள் அவர்கள் விரும்பாமலே ஆபாச படங்களைப் பார்க்கும்படி அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
10. 11 வயதுக் குழந்தைகள் வரை இணைய ஆபாசப் படங்களை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
11. அதிகம் பார்க்கப்பட்ட ஆபாச வீடியோக்களில் 88 சதவீத வீடியோக்கள் வன்முறையான வீடியோக்கள்.
12. கன்னத்தில் அறைவது போன்ற காட்சி 41 சதவீத ஆபாச வீடியோக்களில் இருக்கிறது.,
13. ஆபாசப்படங்கள் பெரும்பாலும் ஆண்பெண் சமத்துவத்தைப் பார்ப்பதில்லை. ஆண் அடையும் இன்பமாகவே அது தயாரிக்கப்படுகிறது. பார்க்கப்படுகிறது. பெண்கள் இதில் போகப்பொருட்களே.
14. இணையத்தில் இருக்கும் 20 சதவீத ஆபாசப்படங்கள் குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட குழந்தை ஆபாசப் படங்கள்.
15. ஆபாசப்படங்களைப் பார்ப்போர் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோர் மேல் குறைவாகவே பரிதாபப்படுகிறார்கள். அவர்களிடம் வன்முறையாக காம இச்சையை தீர்த்துக்கொள்ளும் போக்கு அதிகரிக்கிறது.