உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் வானில் இருந்து யாரோ உரக்க சிரிப்பது போன்ற பயமுறுத்தும் குரலாக ஒரு வினோத ஒலியைப் பலர் பதிவு செய்து உள்ளனர். கடந்த 2012ல் ஆரம்பித்த இதுபோன்ற பதிவுகள் இன்னும் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உளளன.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த ஒலி பல இடங்களிலும், ஜெர்மனி, ஹங்கேரி,கிரீஸ்,டென்மார், சுவீடன்., இங்கிலாந்து,கோஸ்டா ரிகா, உக்ரைன், மற்றும் பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் சில இடங்களிலும் கேட்கப்பட்டு பதிவு செய்யபட்டு உள்ளது. ‘வினோத ஒலி’ என்ற தலைப்பில் இந்த ஒலிப்பதிவுகள் யூடியூபில் போடப்பட்டு உள்ளன.
உலகம் முழுவதும் இருந்து நுற்று கணக்கான பதிவுகள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன. வித்தியாசமான இந்த ஒலி குறிந்து விஞ்ஞானிகள் அறிவார்ந்த விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வரும் ஒவ்வொரு தகவல்களை வெளியிட்டு உள்ளனர். பாறை வெடிப்புகள், உயரழுத்த எரிவாயு வெடிப்பு, வளிமண்டல அழுத்தம் அல்லது இயற்கை அழுத்தம் என்று பல தியரிகள் சொல்லப்படுகின்றன. இந்த ஒலி அலைகள் பீகாசஸ் என்கிற கேலக்ஸியிலிருந்து புறப்பட்டு இங்கு வந்த ஏதோ சமிக்ஞைகள் போல இருக்கின்றது என்று இதன் தோற்றத்தைப் பற்றி சிலர் ஆராய்ந்து சொல்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த கோட்பாடும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
ஆத்திக ஆசாமிகள் உடனே இது கடவுள் தான் சிரிக்கிறார் என்று கிளப்பிவிட்டாலும் விடுவார்கள். சாம்ப்பிளுக்கு சில வீடியோக்களை கீழே பாருங்கள்.