‘ஸ்லீப்லெஸ் நைட்ஸ்’ என்கிற பிரெஞ்சுப் படத்தை சட்டபூர்வமாகத் தழுவி கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் தூங்காவனத்தின் ட்ரெய்லர் செப். 16ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது.

ஒரு ஆக்ஷன் த்ரில்லராக வரப்போகும் இப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் ஆரம்பித்து 38 நாட்களில் முடிவடைந்துள்ளது. ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் கமல் சில கெட்டப்களில் தோன்றுகிறார். பிரகாஷ் ராஜ், கிஷோர், த்ரிஷா போன்றோரும் ட்ரெய்லரில் தோன்றுகின்றனர்.

Related Images: