சென்னை வெள்ள நிவாரணப்பணிகளில் கொஞ்சமும் அயராது ஈடுபட்டு வருபவர்களில் நமது இசைஞானி இளையராஜாவும் ஒருவர். பாட்டாலே புத்தி சொன்னார்.பாட்டாலே பக்தி சொன்னார். இப்போதோ படாத பாடுபட்டு களமிறங்கி உதவிக்கரம் கொடுக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாட்டி விட்டுத்திரும்பும்போது, அவரை மைக்குகளால் மறித்த ஒன்றிரண்டு நிருபர்களில் ஒருவர், `பீப்` பாடல் பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று கொஞ்சமும் நாகரிகமில்லாமல் கேள்வி கேட்கிறார்.
மூக்கு நுனிக்கு கோபம் வந்த ராஜா `உனக்கு அறிவிருக்கா? என்று கேட்க, அந்த அறிவாளி நிருபரும் `எனக்கு அறிவிருக்கு. ஆனா அந்த கேள்விக்கு உங்க பதில் என்ன ? என்று கொஞ்சமும் வெக்கம் இல்லாமல் கேட்கிறார்.
பின்னர் ஒரு தன்னார்வலர் வந்து ராஜாவை அக்கூட்டத்திலிருந்து விலக்கி அனுப்ப, பஞ்சாயத்து தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
`அய்யா அறிவு நிறைந்த நிருபரே, நாம ஊடகம், யாரை என்ன கேள்வி வேணும்னாலும் கேக்கலாம்குறதுக்காக ……வேண்டாம் ராசா….