பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்திய சுற்றுலா துறையின் ’வியக்கதக்க இந்தியா’ என்ற திட்டத்தின் விளம்பர தூதராக இருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆமீர்கான், நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாகவும்,என் மனைவி கிரண் என்னிடம் வந்து, நாம் வேண்டுமென்றால் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா? குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கிரண் கூறியுள்ளார். கிரண் பயப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை” என்றும் கூறியிருந்தார். அமீர்கான் முஸ்லீம் என்பதால் ஆர்.எஸ்.எஸ் முதல் ப்ஜரங்தள் வரை அவரைக் காய்ச்சி எடுத்துவிட்டார்கள்.
அப்புறமென்ன. இன்க்ரெடிபிள் இந்தியாவிலிருந்து இன்க்ரெடிபிளாக அமீர்கான் தூக்கப்பட்டார். தற்போது அவ்விடத்தில் அமிதாப் பச்சனையும், ப்ரியங்கா சோப்ராவையும் அரசு நியமித்திருக்கிறது.
இதுபற்றி மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறும்போது, “நமது சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் வியக்கத்தக்க இந்தியா என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக ரூ.2.96 கோடிக்கு மெக்கான் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.
அந்த நிறுவனம்தான் அமீர்கானை இந்தப் பிரச்சாரத்தில் விளம்பர தூதராக ஈடுபடுத்தி வந்தது. இப்போது மெக்கான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. இதன் மூலம் அமீர்கானும் இனி பிரச்சாரத்தில் இடம் பெற மாட்டார்” என கூறினார்.
முதலில் இன்க்ரெடிபிள் இந்தியான்னு ஒரு விளம்பரம். எதுக்கு ? சுயவிளம்பரம் எதுக்கு ? இன்க்ரெடிபிள் இங்கிலாந்துன்னோ, இன்க்ரெடிபிள் அமெரிக்கான்னோ விளம்பரம் யாரும் பண்றாங்களா என்ன ? இந்தியாவின் வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதையும் பார்த்து வெளிநாட்டுக்காரனா தன்னால் தேடி வரவேண்டும். அதை விட்டுட்டு நாங்க இன்க்ரெடிபிள்னு நாமளே சொல்லிக்கக் கூடாது.
வறுமையும், பிச்சைக்காரர்களும், கீழே இறங்கிக் கொண்டே செல்லும் வாழ்க்கைத் தரமும் கொண்ட இந்த இந்தியா 75 வருடங்களாக பெரிதாக என்ன உயர்ந்திருக்கிறது. செவ்வாய்க்கு ராக்கெட் விட்டதும், அணு குண்டு வெடித்ததும் தான் சாதனைகள் என்றால் அது எல்லா விக்கெட்டும் டக் அவுட் ஆக விராத் கோலி மட்டும் 2030 ரன் எடுத்தார் என்பது போன்று பயனே இல்லாத செயல் இல்லையா.