28 வயதாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி, ரஜினி உட்பட வயதான கதாநாயகர்களின் ஹீரோயினாக பாலிவுட்டில் ஆகிவிட்டவர். இவர் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து  தனது மேனேஜரான பன்ட்டி சச்தேவாவை காதலித்து வந்தார். சச்தேவா சல்மான் கானின் தம்பி சொஹைல் கானின் மைத்துனராாவார். சச்தேவா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்.

சோனாக்ஷி, சச்தேவாவின் காதல் துவங்கிய வேகத்திலேயே டக்கென முறிந்துவிட்டது.  சச்தேவா இதற்கு முன்பு நடிகைகள் சுஷ்மிதா சென், நேஹா தூபியா ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டார். சோனாக்ஷி நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அர்ஜுன் கபூர் ஆகியோருடன் நெருங்கிப் பழகி பிறகு காதல் கசந்து பிரிந்துவிட்டவர்.

தற்போது மீண்டும் சோனாஷியும், சச்தேவாவும் ஒரு பார்ட்டியில் சந்திக்க பக் கென்று அவர்களிடையே இருந்த காதல் நெருப்பு பற்றிக் கொண்டதாம். இப்போது மீண்டும் ஜோடியாக க்ளப்புகளிலும், விழாக்களிலும் தென்பட ஆரம்பித்திருக்கிறார்கள் இருவரும்.

இம்முறை இது கண்டிப்பாக திருமணத்தில் போய் முடியும் என்று.சச்தேவா நம்புகிறாராம். சோனாஷி இன்னும் பிடிகொடுக்காமல் இருக்கிறாராம். சட்டு புட்டுன்னு கல்யாணம் செஞ்சு செட்டிலாகுங்க அம்மணி. முப்பதுக்கு மேல நிறைய விஷயங்கள் கஷ்டமாயிடும்னு சொல்றாங்க.

Related Images: