லைக்கா நிறுவனம் தனது ஆக்டோபஸ் கால்களை தமிழ்ச் சினிமாவில் விரித்துப் பதித்திருக்கிறது. அதில் பெரிய டைரக்டர்களான வெற்றிமாறன், மணிரத்னம் உட்பட பலரும் அடக்கம். அதில் லேட்டஸ்டாக இருப்பது ஷங்கர். ஷங்கரின் எந்திரன் அடுத்த பாகத்தை லைக்கா தான் தயாரிக்கிறார்கள்.
ரஜினி ரோபோவாக நடிக்கும் ‘எந்திரன் 2.0’ வின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அக்ஷய்குமார் வில்லன் வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சன் இப்படத்தில் ரஜினியுடன் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஏர்லிஃப்ட்’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ரஜினி மோடியின் நண்பர். எதிர்காலத்தில் தமிழக பா.ஜ.க வில் இணையலாம் என்று பா.ஜ.கவினரால் ஸ்பாட் வைக்கப்பட்டிருப்பவர். இந்தப் பிண்ணியிலேயே ரஜினிபத்ம விபூஷண் விருது கிடைத்திருக்கிறது. ரஜினி சாருடைய தொலைபேசி எண் தன்னிடம் இல்லை. என்பதால் அக்கணத்தில் அவரிடம் தொலைபேசி போட்டு வாழ்த்துத் தெரிவிக்க முடியவில்லை. பின்பு நேரில் ரஜினி சாரை வாழ்த்தினேன்.’ என்று தெரிவித்திருக்கிறார் அக்ஷய் குமார்..
ரஜினி மனித நேயம் கொண்ட ஒரு மதவாதி. அதே சமயம் பா.ஜ.க, ஆர்.எஸ்,எஸ் போன்ற தீவிர இந்துத்துவாக்களின் கொள்கைகளை கொண்டவரல்ல. அதனால் அவர்கள் அவருக்கு செட்டாகுவாரகளா என்பது சந்தேகமே.
அவர் காங்கிரஸில் கூட சேரட்டும். ஆனால் பா.ஜ.கவில் மட்டும் சேர்ந்து விடக்கூடாது.