மலையாளத்தில் கடந்தாண்டின் மிகப்பெரிய வெற்றியைத் தந்த படம் பிரேமம். தமிழிலும் வெளியாகி நன்கு ஓடியது. பொங்கல் பண்டிகையையொட்டி புதிய தமிழ்ப் படங்களின் வருகைக்காக தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட இந்த மலையாளப்படம் மீண்டும் தற்போது தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தில் மலர் டீச்சராக நடித்து அனைவரின் மனத்தையும் கொள்ளை கொண்டிருப்பவர் தமிழ்ப் பெண்ணான சாய்பல்லவி. மலர் என்ற கதாபாத்திரத்தில் அப்படத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. தற்போது துல்கர் சல்மானுடன் காளி என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
க்யூட்டான அவரது முகமும், நடிப்பும் மணிரத்னத்தின் கேமராப் பார்வையில் விழுந்திருக்கிறது. விளைவு. மணிரத்னத்தின் புதிய படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் கார்த்தி அவருக்கு ஜோடியாக நடிப்பார் என்று தெரிகிறது.
அலைபாயுதே பார்ட் -2 வுக்குப் பின் மணிரத்னம் கொஞ்சம் கூட அப்படி இப்படி சமூகத்துக்காகச் சிந்திக்கத் திருப்பிவிடாமல் மீண்டும் இப்படத்தை ரொமாண்டிக் திரில்லராக கலந்து கட்டி அடிக்க இருக்கிறார். இதுவரை மணிரத்னம் த்ரில்லர்கள் ஏதும் இயக்கியதில்லை. இப்படத்திற்கு இசை மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான்..