நடிகர் சிம்புவும் அனிருத்தும் ஆஸ்கார் ரேஞ்ச்சுக்கு யோசித்து உருவாக்கிய பீப் பாடலுக்கு சமூகம் முழுக்க எதிர்ப்பு வலுத்ததில் இருவரும் தலை மறைவாகிவிட்டனர்.
அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. ஆனாலும் காவல் துறை, நீதித் துறை எல்லாம் இவர்கள் விஷயத்தில் பீப் பீப் என்று தத்தித் தத்தி வேலை செய்வது போலத் தெரிகிறது. சிம்புவின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சிம்பு மீது போடப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளுக்கு முன் ஜாமீன் தேவையில்லை என்றும், அவை ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்பதால், சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.
ஜனவரி 11-ந்தேதி அன்று விசாரணைக்காக சென்னை போலீசில் சிம்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். சிம்பு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி இAன்று போலீஸ் முன் ஆஜராகவேண்டியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அனிருத்தோ கனடாவிலிருந்து இன்னும் கிளம்ப மனமில்லாமல் சுற்றி வருகிறார். சிம்பு ஆஜராவதற்குப் பதில். வரும் ஜனவரி 29 -ம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து சிம்புவுக்கு விலக்களித்து ஒரு மனுவைப் போட நீதிபதியும் ஓ.கே. பேஷா உங்க சவுரியம் போல வாங்க என்று உத்தரவிட்டுள்ளார்.
அதனாலே என்னங்க. நீதி நிலைக்கட்டும். தர்மவான் சிம்பு வெல்லட்டும்னு நீங்களும் சேர்ந்து பாடுங்க.