தமிழ்சினிமாவில் படம் ஓடுகிறதோ அல்லது அடுத்த காட்சியிலேயே ஊத்திக்கொள்கிறதோ ஆனால் ‘சக்சஸ் மீட்’ நடத்துவது தயாரிப்பாளர்களின் கெட்ட பழக்கம்.
இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு வெளியான ‘ரஜினி முருகன்’ படம் மூன்றாவது வாரத்தைத் தாண்டி வசூலைக் குவித்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே தயாரிப்பாளர்கள் போஸ், லிங்குசாமி இருவரும் இம்மகிழ்ச்சியான செய்தியை பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவிக்க விரும்பினார்கள்.
படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை இந்நிகழ்ச்சிக்கு லிங்குசாமி அழைக்க முயற்சித்தார். இதைத்தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் லிங்கு அண்ட் கோ வினர் யருடைய போனையும் அட்டெண்ட் பண்ணுவது கூட இல்லையாம்.
பட வெளியீட்டு நேரத்தில் மதுரை வினியோகஸ்தரும், கொங்கு மண்டல தியேட்டர் உரிமையாளர் ஒருவரும் லிங்குசாமியை ஆயுதமாக வைத்து 5 கோடி பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் நடிக்கும் பிற படங்களை தியேட்டர்களில் போடவிட மாட்டோம் என மிரட்டியதால் சிவகார்த்திகேயன் 5 கோடி ரூபாய் பணம் கொடுத்தாராம்.
அதை மனதில் வைத்துக்கொண்டு, தொழில் நாகரிகமின்றி நடந்து கொண்ட லிங்குசாமியுடன் நட்பாகவோ, தொழில் ரீதியாகவோ இனி எந்த உறவும் தேவையில்லை என சிவகார்த்திகேயன் கறாராகக் கூறிவிட்டாராம்.