கேட்பதற்கு ஏதோ ஹாலிவுட் படத்தின் டப்பிங் பெயர் போலிருக்கும் இது தான் கௌதம் இயக்க தனுஷ் நடிக்க விருக்கும் படத்தின் தலைப்பு.

கவுதம்  இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் சிம்பு – மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து கவுதம் கவுதம் மேனன் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது  இப்படத்திற்கு ‘என்மேல் பாயும் தோட்டா’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரொமான்ஸ் ப்ளஸ் காதல் படமாக உருவாகவுள்ள இப்படத்தை குறுகிய நாட்களில் எடுத்து முடிக்கப் போகிறாராம் கௌதம்.  மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும்..

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் ‘மிரட்டு’ படத்திலும்,  துரை.செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்திலும் நடித்து வருகிறார். அதன்பிறகு, கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. , தனுஷ்  வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’, தொடர்ந்து ஒரு ஹாலிவுட் படம் என்று படு பிஸியாகப் போய்க்கொண்டிருக்கிறார்.

Related Images: