பிரபு சாலமன் இயக்கி 2012-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘கும்கி’. விக்ரம் பிரபு யானைப் பாகனாக நடிக்க, லட்சுமி மேனன் மலைஜாதிப் பெண்ணாக நடித்திருந்தார். ஒரு யானைக்கும் பாகனுக்கும் இடையே இருந்த உறவையும், மலைவாழ் மக்களின் மெல்லிய உணர்வையும், காதலையும் அழகாக எடுத்துச் சொல்லிய படமாக கும்கி பெரும் வெற்றி பெற்றது.
லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தில் தம்பி ராமையா, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தற்போது ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிரபு சாலமன் முடிவெடுத்திருக்கிறாராம்.
பிரபு சாலமன், தனுஷை வைத்து இயக்கி வரும் ‘மிரட்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். இப்படம் முடிந்ததும் ‘கும்கி’ 2 ஆரம்பிப்பாராம். ஆனால் அதில் நடிக்க விக்ரம் பிரபுவிடம் பேசவில்லையாம். புதிய கதைக்களம் மற்றும் பாத்திரங்கள் நடிப்பார்கள் எனத் தெரிகிறது.