சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் கபாலி. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 50 நாடுகளில் திரையிடப்பட்டது. சினிமா கார்ப்பரேட்டுகளின் கையில் பக்காவாக போயிருப்பதை கபாலியின் வெளியீடும் அதனையொட்டி நடந்த விளம்பர விஷயங்களும் உணர்த்துகின்றன.

கபாலி படம் உலகம் முழுவதும் 6 ஆயிரத்து 500 க்கும்அதிகமான தியேட்டர் களில்  திரையிடப் பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்து 500 தியேட்டர்களில் அரங்கு நிறைந்த  காட்சியாக நடந்தது. 2 ஆயிரம் தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கு அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டன.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் ‘கபாலி’ படத்துக்கு ரசிகர் களின் ஆதரவு அமோகமாக இருந்தது. வழக்கமாக ரசிகர்களுக்கு முன்னுரிமை அளித்து முதல் மூன்று நாட்களில் அவர்களுக்கே டிக்கட்டுகள் பெரும்பாலும் தரப்படும். இம்முறை முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகள் டிக்கெட்டுகளை மொத்தமாக புக் பண்ணிக் கொண்டன.

இன்னொரு விஷயம். மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள கபாலி படத்தின்  இறுதி காட்சியில் கபாலி போலீசிடம் சரண்டைந்தார் என்ற வாசகம் படத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசியா தணிக்கை வாரிய தலைவர் அப்துல் ஹமீது படத் தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில் குற்றம் ஒரு போதும் பலன் தராது என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக மேற்கண்ட வாசகத்தை சேர்க்குமாறு கூறியிருந்தார்.
அவரின் வேண்டுகோளை ஏற்ற படத்தின் தயாரிப்பாளர் மலேசியாவில் மட்டும் கபாலி படத்தில் இந்த வசனங்களைச் சேர்த்துள்ளாராம்.

Related Images: