தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பயணத்தை மேற்கொண்டு வரும் சந்தானம், தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது.
“பொதுவாகவே செல்வராகவன் சார் என்றாலே, ‘சீரியஸான மனிதர் தான்’…’அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்’… போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும்…”என்கிறார் நடிகர் சந்தானம்.
தமிழ் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளை பெற்ற செல்வராகவனின் யாரடி நீ மோஹினி திரைப்படம், ஒரு சிறந்த காமெடி – எமோஷன்  களஞ்சியமாகவே இன்றளவும் கருதப்படுகிறது.  அதுமட்டுமின்றி அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஆடவரி மாட்டலாகு அர்த்தாளே வேருளே’ திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் சந்தானம் – செல்வராகவன் கூட்டணியானது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Related Images: