கார்த்தி, ஜோதிகா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி.இந்தப்படத்தில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார்.கமல் நடித்த பாபநாசம் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடித் தமிழ்ப்படம்.சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம்
“தம்பி” படத்தின் இசை வெளியீடு நவம்பர் 30 இல் நடைபெற்றது.விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது…
ஒரு குடும்பம் தொடர்ந்து என்ன பயமுறுத்திட்டு இருக்குனா அது சிவக்குமார் குடும்பம் தான். அவர் மாதிரி ஒரு நல்ல நடிகனா இருக்க முடியுமா பயம், அவர் மாதிரி பிள்ளைகள் வளர்க்க முடியுமா பயம். இப்படி தொடர்ந்து பயமுறுத்திட்டு இருக்காங்க. இந்தப்படத்தோட இயக்குநர் ஜீத்து ஜோசப்போட பாபநாசம் மூணு மொழில பார்த்தேன். அவர் கூட வேலை செய்ய முடியுமானு நினைச்சேன். இந்தப்படம் வாய்ப்பு கிடைச்சது. இதுல எனக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். சாராசரி பாத்திரம் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல ஆனா இந்தப்படத்துல பாகுபலி மாதிரி ஒரு வித்தியாசமான, நடிப்புக்கு வாய்ப்புள்ள படம். இயக்குநர் தனக்கு என்ன வேணுங்கறதுல தெளிவா இருப்பார். நான் அதிகமா இன்வால்வாகி கொஞ்சம் ஓவரா நடிச்சுடுவேன் ஆனா அவர் அதெல்லாம் வேணாம்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவார். நான் அப்படி தான் படத்த கெடுக்கிற எல்லா வேலையும் பார்ப்பேன் அதையெல்லாம் கட்டுபடுத்தி என்ன இந்தப்படத்துல நடிக்க வச்சிருக்காங்க. இந்தப்படத்தில நடிச்சது ரொம்ப சந்தோஷம். நன்றி.
ஜோதிகா பேசியது…
அப்பா அம்மா முன்னாடி மேடையில் தமிழ் பேசறதுக்கு எனக்கு பயம். தம்பி எனக்கு படம் இல்ல ஒரு செண்டிமெண்ட். என் தம்பியோட நடிக்கிற முதல் படம். என் அம்மா ஒரு நாள் ஷூட்டிங் வந்தாங்க. அவங்கள நான் சாப்பிடுங்கனு சொன்னேன் ஆனா அவங்க நான் ஹீரோயின் அம்மாவா வரல, நான் என்னோட பையன் படத்திற்கு வந்துருக்கேன்னு சொன்னாங்க. அவங்க முகத்தில் அவ்வளவு பெருமிதம். எனக்கும் அவ்வளவு பெருமிதம் இருக்கு. கார்த்திகிட்ட முதலிலிருந்தே ஒரு விசயம் சொல்ல வேண்டியது இருக்கு. அவரோட எல்லாப்படத்திலேயும் அவர் கூட நடிக்கிற கேரக்டர்களுக்கு சமமான இடம் கொடுப்பார். ரஜினி சார் கூட சந்திரமுகி நடிச்சப்போ முதல் நாள் அவர் வந்து இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகி பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். எவ்வளவு பெரிய மனுசன்னு தோணுச்சு. அதே ஃபீல் கார்த்திகிட்ட இருந்தது. தன் கூட நடிக்கிறவங்களுக்கு அவ்வளவு இடம் கொடுக்கிறார். சத்யாராஜ் சார் கூட நடிச்சது மிகப்பெரிய சந்தோஷம் வீட்டில் சொன்னப்போ என் குழந்தைகள் அம்மா நீங்க கட்டப்பா கூட நடிக்கிறீன்ங்கனு கேட்டாங்க. அவங்களுக்கு அது தான் ஸ்பெஷல். இயக்குநர் ஜீத்து ஜோசப் ரொம்பவும் அன்பான மனிதர். அவர் வீட்டில் இருந்து அவரோட பெண்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்தாங்க அவங்கள பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது. கோவிந்த் வசந்தா மியூஸிக் என்னோட ஃபேவரைட். சூப்பரான மியூஸிக் தந்திருக்கார். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
கார்த்தி பேசியதாவது…
இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கு. சத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். ஒவ்வொன்னா சேர்த்து இந்தப்படத்த உருவாக்க இரண்டு வருஷம் ஆகியிருக்கு. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். எனக்கு பயமா இருந்தது. ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, நட்பா இருந்தார். அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. நடிச்சது சந்தோஷம். சத்யராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரகடர். சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். இன்னும் அவர் தொழில் மேல காட்டுற மரியாதை பெரிசு. கட்டப்பால்லாம் இன்னக்கி பண்ண இந்தியாவுல ஆள் இல்லை. இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க. கோவிந்த் வசந்தா அலட்டிக்காம, கஷ்டமே படாம ரொமப ஈஸியா மியூஸிக் பண்ணிடுறாரு, அவருக்கு அது வரம். படம் பார்த்தேன் மியூஸுக் அவ்வளவு நல்லா வந்திருக்கு. ஒரு நல்ல நடிப்ப இன்னும் அழகு கூட்டி காட்டறது மியூஸிக் தான். கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் நன்றி
சூர்யா பேசியது…
ரொம்ப நெருக்கமான படைப்பு. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் இணைஞ்சிருக்க படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமா மாறியிருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. கார்த்தி இப்படி படங்கள் நம்பி பண்றது பெருமையா இருக்கு. கார்த்தி ஜோ இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். கிளிசரின் போடமா என்னால அழவே முடியாது “நந்தா” படத்தில மட்டும் தான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சது . ஆனா கார்த்தி கிளிசரின் போடாம அத அநாயசமா பண்ணிடுறாரு. கைதி வரைக்குமே அத நான் பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப ஈஸியா பண்ணிடுறார். ஜீத்து ஜோசப் பாகுபலி அளவு பிரமாண்ட படத்திற்கு இணையா பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்தப்படம் செஞ்சிருக்கறது சந்தோஷம். கோவிந்த் வசந்தா நான் சந்திச்சப்போ எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார். படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையா வந்திருக்கு. படமும் அழகா இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இறுதியாக ரசிகர்களுக்கு உறவுகளுக்கு நாம் கார்த்தி எவ்வளவு அவசரம் இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துடுங்க, 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால் சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம நினவுகள் இல்லாம நம்ம கட்டுப்பாடு மீறி சில விசயங்கள் நடந்துடுது. தயவு செய்து அத தவிர்த்துடுங்க. எல்லோருக்கும் நன்றி.