கவிஞர் வைரமுத்துவின் முன்னாள் தோழியும் பாடகியுமான சின்மயியின் அம்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு சின்மயி மன்னிப்பு கேட்டுள்ளார்.இப்பிரச்சினை மூலம் பாடகி மீண்டும் இணையதளங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.

‘மீ டூ’ இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அளவில் விவாதமான ஒரு விஷயம். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு நீதி கேட்டு தொடங்கப்பட்ட இந்த மீ டூவில் பல பிரபலங்களும் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். தமிழகத்தில் இந்த மீ டூவைப் பிரபலப்படுத்தியவர் பாடகி சின்மயி. வைரமுத்து என்கிற தேரை தெருவுக்கு இழுத்து வந்து தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றி பேசியதுடன், தமிழகத்தின் பல பெண்களுக்கும் அநீதிகளுக்கு எதிராகப் போராட தைரியமும் அளித்தார். பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அச்சமின்றி வெளியே சொல்வதற்கு ஊக்கமும் தந்தார். இதன் காரணமாக பல நேர்-எதிர் விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் அவரது அம்மா கூறிய ஒரு கருத்து சர்ச்சைப் பொருளாக மாறியுள்ளது. தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சின்மயி அம்மா பத்மஹாஸினி, ‘தேவதாசி முறை என்பது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, நம் பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது எப்பேர்பட்ட ஒசத்தியான சிஸ்டம். அதை சிதைச்சதனாலே நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பேசிய வீடியோ பலராலும் பகிரப்பட்டது.

இது தொடர்பாக பாடகி சின்மயியிடமும் கேள்விகள் எழுப்பி வந்தனர். ‘ஆணாதிக்கம், பெண்களின் பாதுகாப்பு என்று தொடர்ந்து பேசி வருகிறீர்கள். உங்கள் அம்மா இப்படி பேசியிருப்பது சரியானதா? முதலில் மாற்றத்தை உங்கள் தாயிடம் இருந்து ஆரம்பியுங்கள்’ என்பது போன்ற கேள்விகளை அவரிடம் கேட்டனர். அதுமட்டுமின்றி மிகக் கடுமையான சொற்களாலும் சின்மயியையும், அவரது தாயாரையும் தாக்கி வந்தனர். அந்தப் பதிவுகளில் பலரும் சின்மயியை டேக் செய்திருந்தனர்.

இதுகுறித்து தற்போது சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’ என்பதாகக் கூறி மன்னிப்பு வேண்டியுள்ளார். மேலும், அம்மாவின் கருத்துக்கு அவர்தான் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Images: