உதயநிதி ஸ்டாலின்,அதிதிராவ்,நித்யா மேனன் நடித்துள்ள மிஷ்கினின் ‘சைக்கோ’படம் இம்மாதம் 27ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் அந்த தேதியை ஒரு மாதம் தள்ளி ஜனவரி 24க்குத்தான் ரிலீஸ் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும், ட்ரெயிலரும் ரிலீஸாகி பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் மிஷ்கின் ரசிகர்கள் இப்பட வெளியீடு குறித்து மிக ஆர்வமாக உள்ளனர். மிஷ்கினின் அத்தனை படங்களுக்குமே ‘சைக்கோ’என்ற தலைப்பு பொருந்தும் என்றாலும், அவரே விரும்பி ஒரு படத்துக்கு ‘சைக்கோ’என்று பெயர் வைத்துள்ளதால்,படம் ஓடும் அந்த ரெண்டரை மணிநேரம் தாங்களும் ஒரு சைக்கோவாக மாறி படத்தை அனுபவிக்க முடியும் என்பது அந்த ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்தது.
தற்போது சென்னை சென்சார் குழுவினரால் அந்த அனுபவத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. படம் சென்சாருக்கு அப்ளை செய்யப்பட்டபோது, முதலில் ‘சைக்கோ’என்ற அந்தத் தலைப்பை மாற்றுங்கள் என்று சில சமூக விரோத சென்சார் அதிகாரிகள் மிஷ்கினுக்கு சொல்லவே கொந்தளித்துப்போன அவர் மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு பொட்டி படுக்கையுடன் கிளம்பியுள்ளார்.இந்த ட்விஸ்டால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 27ம் தேதியிலிருந்து ஜனவரி 24ம் தேதிக்கு மாறியுள்ளது.