சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’படத்தின் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.இச்செய்தியை சில நிமிடங்களுக்கு முன்னர் அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’படத்தில் ஜோடியாக நடித்தவர் மேனகா. இவரது மகளான கீர்த்தி சுரேஷ் சில மலையாளப் படங்களில் நடித்துவிட்டு ‘இது என்ன மயக்கம்’படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி ஆனார். அவ்வளவாக ராசி இல்லாத நடிகை என்ற பெயர் எடுத்த அவர் அடந்த சாவித்திரியின் சொந்தக்கதையான ‘மகா நடி’தெலுங்குப்படத்துக்காக தேசிய விருதுபெற்றார்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் சிவா இயக்கும் ரஜினி படத்துக்கு நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.ரஜினியுடன் இவர் இணையும் முதல் படம் இது. துவக்கத்தில் ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. ரஜினிக்கு 70 வயது கீர்த்தி சுரேஷுக்கு 27 வயது என்பது இங்கே அவசியமில்லாத தகவல்.