சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய அளவில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற நீண்ட நெடிய புலம்பல்களுக்கு மத்தியில் வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் மட்டும் 12 படங்கள் ரிலீஸாக உள்ளன. இன்றைய தினசரிகளில் அத்தனை பட நிறுவனங்களும் விளம்பரம் கொடுத்து அதை உறுதி செய்துள்ளன.

டிசம்பர் 6ம் தேதி, நேற்றைய தினம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’,’ஜடா’,’தனுசு ராசி நேயர்களே’,’இருட்டு’ஆகிய 4 படங்கள் ரிலீஸாகியுள்ளன. அப்படங்களில் ‘குண்டு’படம், பா.ரஞ்சித்தின் முந்தைய தயாரிப்பான ‘பரியேறும் பெருமாள்’ போலவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதர படங்களில் ‘ஜடா’ஓரளவுக்கு ஓகே என்னும் நிலியில் தனுசு ராசி நேயர்களின் ஜாதகத்தில் நேர விரயம் என்றும் இருட்டு படம் பண விரயம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த வாரம் ‘காளிதாஸ்’,’சாம்பியன்’,’’பரமு’,’விஜயன்’,’திருப்பதி சாமி குடும்பம்’,’கேப்மாரி’,’கருத்துக்களை பதிவு செய்’,சென்னை டு பாங்காக்’,’கைலா’,’50 ரூபா’,’தேடு’,’அய்யா உள்ளேன் ஐயா’ ஆகிய 12 படங்கள் ரிலீஸாகின்றன. அந்த 12 படங்களையும் பார்க்க விரும்புகிற துணிச்சலான ஆசாமிகள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை?

Related Images: