சமீபத்தில் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்து விட்டு கெத்தாக அவர் சென்றிருக்கலாம் தான். ஆனால் விதி யாரை விட்டது. திறப்பு விழாவில் அறிஞர்கள் பற்றி உரையாற்றிய எடப்பாடி , உதவியாளர் எழுதிக் கொடுத்ததை தப்பும் தவறுமாக வாசித்து நன்றாக மாட்டிக் கொண்டார்.
அவருடைய புலமையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து விட்டார்கள். கம்பராமாயாணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று ஆரம்பித்து, ஆபிரகாம் லிங்கனை அபிராமி அபிராமி என்று உளறிக் கொட்டியது வரை எல்லாம் விலாவரியாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.
அம்பேத்கரின் முழுப்பெயரான பாபா சாகேப் அம்பேத்கார் பெயரை சொல்லுவதற்குள் படாதபாடு பட்ட முதலமைச்சர், அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது என்று பகத்சிங்குக்கான வரியை சேர்த்து படித்து அம்பேத்காருக்கு தூக்குத் தண்டனை விதித்து புது வரலாறு எழுதினார்.
இது போதாதென்று அரசு சார்பில் அடுத்த ஆண்டு 70 லட்ச ரூபாய் நிதி புத்தக கண்காட்சிக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர். உடனே அப்படியே அரசு புத்தகக் கண்காட்சியை குத்தகைக்கு எடுத்தது போல ஆகிவிட்டது.
மக்கள் நீதி மையம் என்ற பதிப்பகம் எடப்பாடி அரசின் கொள்ளைகள் என்று ஒரு புத்தகம் வெளியிட்டிருந்ததால் அப்பதிப்பகத்தையே இரண்டாவது நாளில் கண்காட்சியிலிருந்து தூக்கிவிட்டார்கள்.
இது தவிர ஹெச் ராஜா வேறு விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வெளியிடும் எல்லா பதிப்பகங்களையும் தூக்கவேண்டும் என்று பத்திரிக்கை சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும்படி பேசினார். புத்தக கண்காட்சிக்குள் கருப்பு உடை அணிந்து யார் வந்தாலும் உடனே அவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தி யார் என்ன என்று கேள்விகள் கேட்கிறார்களாம் ?
பா.ரஞ்சித்தின் நீலம் பதிப்பகத்தில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதுவதால் அந்தப் பதிப்பகத்தைச் சுற்றி போலீசார் காவலுக்கு நின்று வருவோர் போவோரை கண்காணிக்கின்றனராம்.
இதுபோன்ற பல்வேறு அரசியல் தலையீடுகள் நிகழ்ந்துள்ளன புத்தகக் கண்காட்சியில். இதைக் கண்டித்து மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்.பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் கண்காட்சி அரங்கிலேயே தனது கண்டனத்தை பதிவு செய்துவிட்டு உரை நிகழ்த்தாமலேயே மேடையை விட்டு இறங்கினார்.
தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரியம் , பெரியார் , அண்ணா, கலைஞர் போன்ற அறிஞர்களின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் வளர்ந்தது. இதை உணராமல் இதையும் ஒரு விளம்பர மேடையாக நினைத்து முதல்வர் எடப்பாடி பேசியதும், விடுதலை பேசும் பதிப்பகங்களுக்கு தடை போட முயல்வதும் சிறுபிள்ளைத் தனமானது.
முதல்வர் எடப்பாடி அவர்களின் பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்த வீடியோ கீழே