திரைப்பட இயக்குனர் சுசீந்திரன் நேற்று காலை நடைப்பயிற்சி சென்றபோது வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

வெண்ணிலா கபடிக்குழு வில் இயக்குனராக அறிமுகமாகி, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் சமீபத்தில் சாம்பியன் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
நேற்று இயக்குனர் சுசீந்தரன் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியின் எதிரே வந்த வாகனம் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுசீந்திரனின் இடது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

தோள்பட்டையில் அவருக்கு லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் சுசீந்திரனுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Related Images: