WordPress database error: [You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'FROM 4bz_posts
WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_...' at line 2]SELECT SQL_CALC_FOUND_ROWS all
FROM 4bz_posts
WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_posts.post_status = 'publish')))
ORDER BY 4bz_posts.post_date DESC
LIMIT 0, 15
பல பிரபல நடிகர்களும் மூன்று வாரங்கள் கூட ஒழுங்காக ஓடாத படத்துக்கு ஏதாவது தில்லாலங்கடி வேலைகள் செய்து நூறாவது நாள் போஸ்டர் ஒட்டிவிடுவார்கள். இந்த சூழ்நிலையில் ஒரிஜினலாகவே 100 நாட்கள் ஓடி அசுர வெற்றி கண்ட படம் வெற்றிமாறன்,தனுஷ், எஸ்.தாணு கூட்டணியின் அசுரன். அதற்கான ஒரு எளிமையான விழாவும் நடந்தது.
அவ்விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம், அம்மு அபிராமி, கென் கருணாஸ், ஜிவி.பிரகாஷ், ராமர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய தனுஷ்,“இது மறக்க முடியாத நிகழ்ச்சி . இது நன்றி சொல்கின்ற மேடை..தாணு சாருக்கு என் நன்றி. வெற்றிமாறனுக்கும் எனக்கும் அவர் கொடுத்த சுதந்திரம் தான் அசுரன் உருவெடுத்ததிற்கு காரணம். ஜிவிக்கு என்னுடைய நன்றி. இந்தபடத்தின் பின்னணி இசையில் தான் படத்தின் 25% சதவிகிதம் இருக்கிறது.வேல்ராஜ் அவர்களின் உழைப்பு மிகவும் பெரிது. என் உடன் சேர்ந்த நடித்த எல்லா நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. அது ஒரு கனாக்காலம் சூட்டிங்ல ஒரு காட்சி நடிக்கணும். வெற்றிமாறனை பண்ணச் சொல்லுங்க..அதைப்பார்த்து நடிக்கிறேன் என்று சொன்னேன். உடனே வெற்றி கையில் இருந்த பேடைப் போட்டு பிரமாதமாக நடித்துக் காட்டினார். நான் அதன்பிறகு நடித்தேன். அன்றில் இருந்து இன்றுவரை நானும் வெற்றியும் சகோதரராக இருந்து வருகிறோம்..சிவசாமி கதாபாத்திரத்தை என்னை வைத்து இயக்க முடியும் என்று முடிவு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படம் ரிலீஸாகும் போது நான் ஊரில் இல்லை. எனக்கு ரிசல்ட் என்னனு தெரியல..கஷ்டமா இருந்தது. அப்ப தான் எனது அம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரிய வெற்றி அடையும் என சொல்கிறார்கள் என சொன்னார் ..ஆனால் நீ தூரமா இருக்கியேப்பா அப்படினு சொன்னாங்க..அப்ப தான் நான் சொன்னேன்..வெற்றி என் பக்கத்திலேயேதான் தான் இருக்கும்மான்னு “நான் வெற்றிமாறனைச் சொன்னேன்..இது எல்லோருக்குமான வெற்றி. வெற்றிமாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்..நமக்கு எல்லாம் நல்லாகவே முடியும்.” என்றார்.

வெற்றிமாறன் பேசியதாவது,
“படம் தயாராகி வெளி வருவதற்குக் நிறைய மிஸ் அண்டெர்ஸாட்டிங் இருக்கும். அதையெல்லாம் தாண்டி இந்தப்படம் 100 நாள் ஓடி இருக்கிறது. ஒரு படம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். அதற்கான ஸ்பேஸை மட்டும் நாம் கொடுத்தால் போதும். ஒரு படத்தின் கமர்சியல் சக்ஸஸ் என்பது விபத்து தான். நாம் அதற்காக உழைத்தால் மட்டும் போதும். நிறைய பேர் எனக்கு பிரஷர் தரப்பட்டராகச் சொன்னார்கள். ஆனால் அப்படி அல்ல. இந்தப்படத்தின் கமர்சியல் சக்ஸஸுக்கு பத்திரிகையாளர்கள் பெரும் காரணம். எனக்கு ரொம்ப கோபம் வரும். அதையெல்லாம் உதவி இயக்குநர்கள் மேல் காட்டுவேன். அவங்களுக்கு நன்றி. என்னோட இயலாமையை தான் உங்களிடம் கோபமாகக் காட்டுவேன் என்று உதவி இயக்குநர்களிடம் சொல்லிக் கொள்கிறேன். தனுஷ் எல்லாப்படத்தில் இருந்தும் இந்தப்படத்தில் ஒருபடி மேல் தான். இந்தப்படத்திற்கு அவர் கொடுத்த கமிட்மெண்ட் ரொம்ப அதிகம். எமோஷ்னலா ஒரு விசயத்தை கேரி பண்றதுலாம் ரொம்ப பெருசு. இந்த கதாபாத்திரத்தை அவர் பண்ணியதால் தான் இவ்வளவு சிறப்பா வந்திருக்கிறது . தாணு சார் ஆரம்பத்தில் இருந்தே நல்ல கூலாக மெயிண்டெண்ட் செய்தார். பிரகாஷ்ராஜ் சார் சொன்ன நேரத்தில் சரியாக வருவார். கேமராமேன் வேல்ராஜ் நான் என்ன நினைக்கிறேனோ அதை எடுத்துக் கொடுப்பார். ஜிவி கொடுத்த எனர்ஜி கமர்சியல் சக்ஸஸுக்கு முக்கியக் காரணம்” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது
“மேடையில் வீற்றிருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் எம் வணக்கம். தம்பி தனுஷ் வேலையில்லா பட்டதாரி படம் சமயத்தில் வெற்றிமாறம் அவர்களோடு படம் பண்ணலாம் என்று சொன்னார். அந்தக் காலத்தில் இருந்தே நாங்கள் நல்ல பழக்கம்..எஸ்.பி முத்துராமனுக்கு பிறகு என் மனதை கொள்ளை கொண்டவர் வெற்றிமாறன். தன் படத்தில் வெற்றிமாறன் உழைத்த ஒவ்வொரு நாளும் என்னை வியக்க வைத்தது. சில காட்சிகளை வெற்றிமாறன் போட்டுக்காட்டும் போதெல்லாம் இது பெரிய வெற்றி அடையும் என்று நம்பினேன் . ரிலீஸ் தேதி அறிவித்ததும் வெற்றிமாறன் பதட்டம் ஆனார். என் கண்கள் பனிக்கும் நன்றியை வெற்றிமாறனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் தனுஷுக்குமான தொடர்பை வலுப்படுத்தியது தம்பி அன்புச்செழியன். சிவாஜி சாருக்குப் பிறகு தனுஷின் நடிப்பு பிரம்பிக்க வைக்கிறது. கேரளாவில் படம் பார்த்த அத்தனை பெரிய நடிகர்களும் ஒரே வார்த்தையில்” தனுஷை தவிர யாராலும் இப்படத்தில் நடிக்க முடியாது” என்றார்கள். நடிகர் திலகத்திற்குப் பிறகு தனுஷ் தான். ரஜினியிடம் நான் இந்தப்புள்ள நமக்கு கிடைத்த பொக்கிசம் என்றேன். அவரும் தனுஷ் கால்களில் விழும் சீனில் நானே நடிக்கலாமா என்று நினைத்தேன்” என்றார். இவ்வாறு தாணு பேசினார்.
கென் கருணாஸ் பேசியதாவது,
“முதல் நன்றி வெற்றி சாருக்கு. அவரால் தான் நான் இங்கே இருக்கேன்..தாணு சார் என்னை மிகவும் உற்சாகப் படுத்துவார். தனுஷ் சார் கூட அதிக சீன் இருப்பதால் பயமா இருந்தது. அவர் தான் எனக்கு ப்ரீ டைம் கொடுத்து என்கிரேஜ் பண்ணார். என்னை ப்ரண்ட்லியாக பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் பெரிய நன்றி” என்றார்.
பாலாஜி சக்திவேல் பேசியதாவது,
“இந்த நூறாவது நாள் விழா சும்மா பேசுவதில்லை. தியேட்டர் அதிபர்கள் உள்பட அனைவரின் முன்னிலையில் நடத்துவது தான் சிறப்பு. அதற்கு களம் அமைத்துத் தந்த கலைப்புலி எஸ்.தாணு அவர்களுக்கு நன்றி. இந்த அசுரன் படம் மிக முக்கியமான படம். தமிழ்சினிமாவின் போக்கில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அதற்கான உழைப்பு என்பது வெற்றிமாறன் தனுஷிடம் ஜெனியூனாக இருந்தது..ரைட் சென்ஸில் இயக்குநர் இப்படத்தை இயக்கி இருந்தார். சில படம் விமர்சனம் ரீதியாக நல்ல பெயர் எடுக்கும். வசூல் இருக்காது. சில படம் வசூல் குவிக்கும் ஆனால் நல்ல விமர்சனம் இருக்காது. ஆனால் அசுரனில் இரண்டுமே நடந்தது. என்னை நடிக்க வைத்தது வெற்றிமாறன் தான். எனக்கு நடிப்பே வராது என்றிருந்தேன். வெற்றிமாறனுக்குப் பெரிய நன்றி. இந்த வெற்றியில் பங்கு கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் வெங்கடேஷ் பேசியதாவது,
“அசுரன் படத்தில் நடிக்க வெற்றிமாறன் அழைத்ததும் பயத்தோடு தான் சென்றேன். தனுஷுடன் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் நடிப்புக்கு எப்ப ரெடியாவார் என்றே தெரியாது. வெற்றிமாறனின் வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு அவ்வளவு தெரியும். இந்த வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது எனக்கு ஸ்பாட்லே தெரியும். இந்த வெற்றியில் என்னையும் ஒரு பங்காகச் சேர்த்துக்கொண்ட தயாரிப்பாளர் தாணு சார், வெற்றிமாறன் தனுஷ் ஆகியோருக்கு நன்றி” என்றார்.