பிராமணியம் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அது தனக்கு கீழே உள்ள சாதியினரிடையே பகைத் தீயை மூட்டிவிட்டு அவர்களுக்குள்ளே மோதலை கிளப்பி விட்டு தப்பித்துக் கொள்ளும்.

தமிழ்நாடெங்கும் பாஜகவுக்கு எதிரான, சமத்துவத்தை அழிக்கும் இந்துத்துவாவுக்கு எதிரான, மனோபாவம் மக்களிடையே பெருகி வரும் வேளையில் இடைநிலை சாதியினர் தலித்துகளுக்கு எதிராய் எழுப்பும் ஆதிக்க வெறி குரலாய் வெளிவரவிருக்கிறது திரௌபதி என்கிற இந்தப்படம்.

பாமக, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அர்ஜூன் சம்பத்தின் இந்து முன்னணி போன்ற சாதீய கட்சிகள் தலித்துகளுக்கு எதிராக வைக்கும் வாதம் ‘நாடகக் காதல்’ என்பது. கீழ்சாதிப் பையன்கள் திட்டமிட்டு மேல்சாதிப் பெண்களை மயக்கி காதல் வசப்படுத்தி பின் அவர்களை நிராதரவாய் விடுவது, ஆபாச படமெடுத்து சீரழிப்பது, பெண்ணின் பெற்றோரிடம் காசு வாங்கிக்கொண்டு போவது என்று ஒரு குற்றச்சாட்டை இக்கட்சிகள் நீண்டகாலமாகவே சொல்லிவருகின்றன. இதைத் தடுக்கவே ஆணவப் படுகொலைகள் செய்வதாக அவர்களது ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். அதையே இப்போது படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.

வேண்டுமென்றே காதலித்து ஏமாற்றுபவர்கள் இந்த சாதியில் தான் உள்ளனர் என்று தாழ்த்தப்பட்ட சாதியினரை மட்டும் சுட்டிச் சொல்ல முடியுமா? பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகரின் பையன் ஒருவனுடன் நாலுபேர் சேர்ந்து எத்தனை பெண்களை காதலித்து மயக்கி ஏமாற்றி, ஆபாச படமெடுத்து, கொலையும் செய்துள்ளனர். அவர்கள் பி.சி. சாதியினர் தானே ?

பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்க சாதி மனோபாவத்தை பிரதிபலிக்கும் திரௌபதி படத்தின் ட்ரெய்லர் கீழே

YouTube player

Related Images: