கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் தென்னிந்தியாவின் விநியோகஸ்தர்கள் பட்டியலை இப்போதே வெளியிட்டுள்ளது படக்குழு இப்படத்தின் வியாபாரம் ரஜினியின் தர்பாரை மிஞ்சிவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்றையும் மறைமுகமாகப் பரப்பி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 70% வரை முடிந்துவிட்டது. ஷிமோகா படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை.
அதற்குள் படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் முடித்துவிட்டது. மேலும், இப்போதே அதிரடியாகத் தென்னிந்தியாவில் விநியோகஸ்தர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது படக்குழு. அந்தப் பட்டியலின்படி:திருநெல்வேலி, கன்னியாகுமரி – ஸ்ரீ சாய் கம்பைன்ஸ்
மதுரை – சுஷ்மா சினி ஆர்ட்ஸ், கேரளா – மலபார் மற்றும் கொச்சின் ஏரியா – ஃபார்ட்டியூன் சினிமாஸ்,கேரளா – திருவனந்தபுரம் ஏரியா – மேஜிக் ப்ரேம்ஸ்
திருச்சி, தஞ்சாவூர் – ப்ளஸ் மேக்ஸ் பிலிம்ஸ், சேலம் – ஸ்ரீ ராஜ் பிலிம்ஸ், கோயம்புத்தூர் – கந்தசாமி சினி ஆர்ட்ஸ்
வட ஆற்காடு, தென் ஆற்காடு – 5 ஸ்டார் செந்தில், செங்கல்பட்டு – தனம் பிக்சர்ஸ்
சென்னை – ஸ்ரீ கற்பக விநாயகா பிலிம்ஸ் சர்க்யூட்ஸ், ஆந்திரா, தெலங்கானா – ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ், கர்நாடகா – தீரஜ் எண்டர்பிரைசர்ஸ்
கோடை விடுமுறைக்கு வெளியாகும் படத்தின் விநியோகஸ்தர்கள் பட்டியலை இப்போதே வெளியிட்டு இருப்பது, விநியோகஸ்தர்களைப் பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனென்றால், இப்போதே திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கி அனைத்தையும் முடித்து எவ்விதப் பிரச்சினையுமின்றி படம் வெளியாகும் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
இப்படி மிக சீக்கிரமாக பட்டியலை வெளியிட்டிருப்பதோடு, தொகை எதையும் வெளிப்படையாக அறிவிக்காத படக்குழு, வியாபாரம் ரஜினியின் தர்பாரை விட அதிகம் என்று மறைமுகமாக மார்தட்டிக்கொள்கிறதாம்.