வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற வடிவேலுவின் டயலாக்கை மறந்துபோன ஒரே மக்கள் முஸ்லீம் மக்கள் தான். இப்போதைய இளைஞர்களுக்கு அந்தக் கால வரலாறு சுத்தமாகத் தெரியவில்லை. ஆங்கிலேயனுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த கூட்டம் இன்று தனது முகத்தை மறந்து நிற்கிறது. விடுதலைப் போரில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத காவிக் கூட்டம் நாட்டுப் பற்றில் முன்னணியில் நிற்கிறது. காரணம் முஸ்லீம்கள் தங்களது தியாகங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாததால் தான்.
உலகத்திற்கே தெரியும் நாட்டு விடுதலைக்காக முஸ்லீம்கள் பட்டபாடு. இப்போதோ நம்மையே குடிமகனாக நிரூபிக்க வேண்டிய நிலை. அதிகாரம் செலுத்தும் இடத்தில் சாவர்க்கர் கூட்டம். யார் இந்த சாவர்க்கர் ?. கொலைக் குற்றத்திற்காக அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆங்கிலேயனின் அடிவருடியாக இருந்து ஆறு முறை மன்னிப்புக் கடிதம் எழுதிய தியாகி என்பதும் தெரியும். ஆனால் அதே அந்தமான் சிறையில் இன்னொரு குற்றவாளியும் அடைக்கப்பட்டிருந்தது யாருக்காவது தெரியுமா?. அங்கு தான் வரலாறு முக்கியம் அமைச்சரே வருகிறது. அடைக்கப்பட்ட குற்றவாளியின் பெயர் ஷேர் அலி அஃப்ரிடி.
வரலாற்றில் இந்தப் பெயர் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. இவர் என்ன குற்றத்திற்காக இங்கு அடைக்கப்பட்டார் என்பதை விட இங்கு என்ன செய்தார் என்பது தான் இப்போதைக்கு முக்கியம். சாவர்க்கர் செய்த கோழைத்தனம் அங்கிருந்த ஜெயிலரின் ஷூவை நக்கியது. சொன்னதைச் செய்து அடிமையாக அடைபட்டுக் கிடந்தது. ஆனால் ஷேர் அலி செய்த செயல் இன்றும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. என்ன செய்தார் தெரியுமா?. இந்திய தலைமை அதிகாரத்தில் இருந்த வைஸ்ராய் லார்டு மேயோவை கழுத்தில் கத்தியைப் பாய்ச்சி கொலை செய்தது. இது தான் காவிக் கூட்டத்திற்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள வேறுபாடு. கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கி ஓட்டினால் சுத்த வீரன் எவனெனத் தெரியும்.
1857 ல் சிப்பாய் கலகத்தில் முஸ்லீம்களின் பங்கு எப்படிப்பட்டது என வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். அதில் கலந்துகொண்ட குற்றவாளிகளுக்காக கட்டப்பட்டது தான் அந்தமான் சிறைச்சாலை. ஆரம்பத்தில் இருநூறு கைதிகளோடு இயங்கிய இந்த ஜெயிலில் தான் ஷேர் அலி வரும்போது ஏழாயிரம் கைதிகள் இருந்தனர். பிப்ரவரி எட்டு 1872 ல் லார்டு மேயோ பர்மாவில் வந்து இறங்கினார். அங்கிருந்த தலைமை நீதிபதி ஜார்ஜ் நார்மனை எவனோ கொலை செய்துவிட்டான். அந்தப் பிரச்சனை பற்றி விசாரிவித்துத் தான் போர்ட் பிளேயர் வந்திறங்கினார் லார்டு மேயோ. அங்கு தான் ஏகப்பட்ட அடக்குமுறைகள் கண்டு கடுப்பில் இருந்தான் ஷேர் அலி.லார்டு மேயோவிற்கு சடங்கு சம்பிரதாயங்கள் பேண்ட் வாத்திய அணிவகுப்புகள் எல்லாம் முடிந்து குடும்ப சகிதமாக சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பும் வேளையில் தான் யாரும் எதிர்பார்க்காத அந்தக் கொலை நடந்து முடிந்தது.இரவு எட்டு மணி.எங்கும் கும்மிருட்டு. மேயோவிற்கு படகு தயாராக நிற்கிறது.அவரது மனைவி படகில் காத்துக்கொண்டிருக்கிறார்.மெதுவாக படகை நோக்கி வைஸ்ராய் அடியெடுத்து வைக்கும்போது தான் இருட்டைக் கிழித்துக்கொண்டு ஷேர் அலி வெளிப்பட்டான்.கையில் கூரான கத்தி. கண்ணிமைக்கும் நேரத்தில் மேயோவின் கழுத்தில் அந்தக் கத்தி பாய்ந்தது. சரியாக மெய்ன் ரத்தக்குழாய் சிதைந்தது.ரத்தம் பீச்சிட நிலத்தில் சரிந்தார் மேயோ.வரலாற்றில் மிக முக்கியமான படுகொலையிது. கொலையை நாம் நியாயப்படுத்தவில்லை. ஒரு சாதாரண கலெக்டரைக் கொன்ற வாஞ்சிநாதன் என்ற இளைஞனை வீர வாஞ்சி என வரலாறு போற்றுகிறது. ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சி கோழை போல் டாய்லெட் அறையில் தற்கொலை செய்துகொண்டதைக் கூட வீரமாக விவரிக்கிறது. ஆனால் இந்தியாவின் வைஸ்ராயையே ஒரு முஸ்லீம் இளைஞன் கொன்று விட்டு தப்பியோடாமல் அப்படியே நின்றவனை வரலாற்றுப் பதிவுகள் எங்குமே காட்டவில்லை. 1873 மார்ச் 11 ஆம் தேதி அந்தமான் சிறையில் தூக்கிலிடப்பட்டார் அப்ரிதி.
நம்மை அடிமையாக்கி ஆட்டம் போட்ட ஆங்கிலக் கூட்டத்தின் தலைமை பொறுப்பில் இருந்த வைஸ்ராயைக் கொன்றவன் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த இளைஞனின் தியாகம் பிற்காலத்தில் கொண்டாடப்படவில்லை. ஐயா சாமி என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சிய கோழை சாவர்க்கருக்கு செல்லுலார் ஜெயிலில் ஒரு நினைவுச் சின்னம். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். சாவர்க்கரை இந்தக் கூட்டம் தூக்கிப் பிடிக்கும்போது ஷேர் அலி அஃப்ரிடியை நாம் ஏன் தூக்கிப் பிடிக்கவில்லை.?. அந்தத் தவறு தான் இப்போது நம்மை இந்த மண்ணின் குடிமகன் என்பதை நிரூபிக்கச் சொல்கிறது. ஷேர் அலி செய்த தியாகம் கோடீஸ்வரி கேள்வி பதிலில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது.
கட்டுரையாளர் : Abdul Samath Fayaz