‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாக உருவான ஹிந்தி திரைப்படம் அந்தாதுன். ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த இத் திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. பெரும் வசூலை அள்ளி மகத்தான வெற்றி பெற்றதோடு, சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தை இதர மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி மாநில மொழிகளில் உரிமை வாங்கி எடுத்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழில் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்ற தனுஷ், சித்தார்த், பிரசாந்த் ஆகியோர் முயற்சி செய்தனர். இறுதியில் நடிகர் பிரசாந்த் அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். ஆயுஷ்மன் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரான மோகன் ராஜா இயக்கிய பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்கினால் சரியாக இருக்கும் என பிரசாந்த் முடிவு செய்துள்ளாராம்.

Related Images: