எங்கள் ஊரில் உள்ள வீட்டிற்கு பின்னால் ஒரு ஆடுமேய்க்கும் குடும்பம் ஒன்று இருக்கிறது….
அந்த வீட்டில் உள்ள நண்பன் ஒருவன் என்னைவிட இரண்டுவயது குறைவு அவனுக்கு….அவனும் இப்போது ஆடு தான் மேய்க்கிறான்…. படிக்க போகவில்லை…. அவனிடம் பொங்கலுக்கு ஊருக்கு சென்ற போது பேசினேன்…. அவன் அப்போதுதான் புதிதாக ராயல் என்பீல்டு பைக் ஒன்றை வாங்கியிருந்தான்.
எப்படி திடீரென இந்த விலையுயர்ந்த பைக்கை வாங்கினாய் என்று கேட்டேன். அவன் தனது ராயல் என்பீல்டு பைக் எப்படி வாங்கினான் என்பது பற்றி சொன்னான்.
இவன் அவன் அப்பாவிடம் ராயல் என்பீல்டு பைக் வாங்கி தர சொல்லி இருக்கிறான்…
அதற்கு அப்பா 20 ஆட்டு குட்டியை 40,000 ரூபாய்க்கு வாங்கி தருவதாகவும்…. இப்போது மேய்க்கும் ஆடுகளுடன் அதையும் சேர்த்து மேய்க்கும் படியும் சொன்னாராம்…. இவனுக்கு அவன் அப்பாவின் கணக்கு அப்போது புரியவில்லையாம்…
சரி என வளர்க்க ஆரம்பித்தானாம்…..
மிகச்சரியாக 10 மாதத்தில் 20 ஆடுகள் வளர்ந்து ஒரு ஆடு 12,000 வீதம்
2,40,000 ரூபாய்க்கு விலைபோனதாம்….
40,000 ஐ தன் அப்பாவிடம் கொடுத்துவிட்டு 2,00,000 ரூபாய்யுடன் மதுரைக்கு போய்…. முழு பேமண்ட் ரெடி கேஷாக கொடுத்து பிடித்த நிறத்தில் வண்டியை எடுத்து வந்துவிட்டானாம்…..
அந்த மதுரை அண்ணாநகரில் இருக்கும் நிறுவனம் இவனுக்கு கொடுத்த மரியாதையை அங்கே ட்யூவுக்கு பைக் வாங்க வருபவர்களுக்கு கூட கொடுக்கவில்லையாம்….
இதில் நான் யோசித்த விடயம்
1)அப்பாவுக்கு போட்ட முதலீடு திரும்பவந்துவிட்டது
2) என் நண்பனுக்கு தன் உழைப்பில் வாங்கிய வண்டி என்ற சந்தோஷம்
3) 10 மாதத்தில் மாதம் 20,000 ரூபாய் சேமிக்க சொன்னால் சென்னையில் ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்களாலும் முடியாது… ஏனெனில் கையில் பணமாக சேர்த்து வைப்பது தனிமனிதன் மீது தொடுக்கப்படும் விளம்பர போரில் வெற்றுபெறுவது கடினம் என்பதால்
4) ஆனால் ஆடு என்ற ஒரு வளர்ப்பாக அந்த பணம் வளர்ந்து கொண்டு இருந்தால் அதை செலவழிக்க முடியாது…..
5) நாம் சாதாரணமாக நினைக்கும் பலரிடம் தான் கார்ப்பரேட்களை மிஞ்சிய அறிவு இருக்கிறது……
6) வண்டி வாகனக் கடன் என்ற பெயரில் கடனில் மாட்டாமல் தப்பித்துள்ளார்கள்
7) இதில் நமக்கு தேவையான ஒன்றே ஒன்று 10 மாத கால பொறுமை மட்டுமே….
நம்மை அவசரஉலகம் என்ற மாயவலைகளுக்குள் நகரத்துவதன் மூலம் பணம் உடனே கொடுக்கப்பட்டு உடனே வண்டி கையில் கொடுக்கப்பட்டும் இருக்கும் ஆனால் நாம் கடனாளிகள்… வங்கி அதன் மூலம் லாபம் அடையும்…
—வாட்ஸப் பதிவு