தயாரிப்பாளரின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் தனது இந்தியன் 2’படப்பிடிப்பை சற்று வேகமாக முடிப்பதற்காக செகண்ட் யூனிட் இயக்குநராக வசந்தபாலனை நியமித்திருக்கிறார் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது.அப்போது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்றது.

அதன்பின் பல சிக்கல்களைக் கடந்து 2019 ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கியது. கமலுக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் சில காலம் தாமதத்துக்குப் பின் இப்போது படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.2020 ஏப்ரலுக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சொன்னதாகவும் அதற்குள் கண்டிப்பாக முடியாது ஜூன் மாதத்தில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடுகிறேன் என்று ஷங்கர் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக ஷங்கர் இதுவரை இல்லாத வகையில் புதுமுடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.அதன்படி, படத்தில் கமல் இல்லாத பல காட்சிகளைப் படமாக்க இரண்டாவதாக ஒரு குழுவை உருவாக்கியிருக்கிறாராம். அந்தக்காட்சிகளை இயக்கப் போகிறவர் இயக்குநர் வசந்தபாலன் என்கிறார்கள். இவர் விரைவில் வெளிமாநிலங்கள் வரை சென்று இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்தவிருக்கிறாராம்.இத்தகவல் இதுவரை கமலுக்கு முறைப்படி அறிவிக்கப்படவில்லையாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.