பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா முதன்மை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இச்செய்தியால் அவரது முன்னாள் காதலர் கவின் பயங்கர அப்செட்டாகியுள்ளதாகத் தெரிகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ஆரம்பமான சிறிது நாட்களிலேயே ‘லாஸ்லியா ஆர்மி’ என்ற பெயரில் ரசிகர் கூட்டம் உருவாகும் அளவுக்கு அவர் பிரபலமடைந்தார். அதற்கிடையில் கவின் – லாஸ்லியா காதல் விவகாரம் பிக் பாஸ் டிஆர்பியை பெருமளவில் உயர்த்தியது. நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் கடந்துள்ள சூழலில், அவர்கள் காதல் எந்த நிலையில் உள்ளது என்பதை ‘கவிலியா’ ரசிகர்கள் பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.
அதே நேரத்தில் லாஸ்லியா, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறுவாரா இல்லை இலங்கை சென்று செய்தி வாசிப்பாளராகவே தொடர்வாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் புதிய ஓர் அறிவிப்பின் மூலமாக இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ள ஃபிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.ஜே.பி.ஆர் மற்றும் ஸ்டாலின் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளது. லாஸ்லியாவின் தமிழ் சினிமா என்ட்ரி குறித்த இந்தச் செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் தருணத்தில் லாஸ்லியா அடுத்த சேரன் படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகவார் என்று சொல்லப்பட்டது.