தமிழ் சமூகப்போராளி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் இம்சை அமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘நான் சிரித்தால்’படத்தைப் பார்த்து கதறி அழாதவர்களே இருக்க முடியாது என்கிற நிலையில் அப்படத்துக்கு அவர் இன்று செவ்வாயன்று சக்சஸ் மீட் நடத்த இருப்பதாக தெரிகிறது.
இராணா என்பவர் யூடியூப் வலைதளத்தில் வெளியிட்டிருந்த ‘கெக்க பிக்கே’என்கிற படு லூசுத்தனமான குறும்படமே ‘நான் சிரித்தால்’படமாக எடுக்கப்பட்டது. ஹிப்ஹாப் தமிழாவின் பரம விசிறியான குஷ்பு இப்படத்தைத் தயாரித்திருந்தார். குறும்படமாக இருந்தபோது சுமாரான இம்சையாக இருந்த இப்படம் பெரும்படமாக வடிவெடுத்தபோது பார்க்க சகிக்க முடியாததாக இருந்தது.
அதிலும் ஆதியின் நடிப்பு வெற்று ஆர்வத் துடிப்பாகவே இருந்தது. ‘இந்தப் படத்துக்காக 50 விதமாக சிரிக்கப் பயிற்சி எடுத்துக்கொண்டேன்’என்று அவர் சில பேட்டிகளில் பினாத்தியிருந்தார். அப்படிப்பட்ட சிரிப்பைப் பார்த்து ரசிகர்கள் செம எரிச்சலடைந்ததுதான் மிச்சம். ரிசல்ட்? படம் முதல் நாளே படு தோல்வி. இரண்டாவது பல தியேட்டர்களில் எண்ட் கார்டு போடப்பட்டு அப்படத்துடன் ரிலீசான ‘ஓ மை கடவுளே’படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில் தன் மீசையில் ஒட்டிய மண்ணைத் துடைக்கவும், அடுத்த ஒரு தயாரிப்பாளரை ஆட்டயப் போடவும் ஓடாத படுதோல்விப்படத்துக்கு
சக்சஸ் மீட் வைத்திருக்கிறார் டுபாக்கூர் தமிழா.