மற்ற எந்த மொழி திரைப்படங்களை கம்பேர் செய்தாலும், அதிக மனித இழப்புகளை கொண்ட திரையுலகம் தமிழ் சினிமா தான்……!
சமீபத்திய மூன்று பேர் இறப்பு அல்லது அதே இடத்தில் ‘பிகில்’ பட லைட்மேன் இழப்பு அல்லது ‘காலா’ படத்தின் உயிரிழப்பு மற்றும் ஜெயண்ட் வீல் உயிரிழப்பு என பல நடந்த இடம் அந்த
இ வி பி என்னும் இடம். இதற்கு முக்கிய காரணம் இரண்டு பேர் – ஒன்று ஈ வி பி நிர்வாகமும், மற்றோன்று இயக்குனர் சங்கர் போன்ற மரண வியாபாரிகள் தான் முழுக்க காரணம்.
ஈ வி பி – 15 வருஷத்துக்கு முன்பு நல்ல ஏரியாய் இருந்த இடம் தான் இந்த ஈ வி பி என்னும் இடம். பின்பு பொழுதுபோக்கு மற்றும் வாட்டர் பார்க் அமைக்க நல்ல சதுப்பான இடம் என்று ஆரம்பித்த பிசினஸ், பல பேரை தெரிந்தும் தெரியாமல் மரண படுக்கை வரை கொண்டு செல்லும் அளவுக்கு விபத்துக்கள், மற்றும் கடைசியாக அரசாங்கம் சீல் வைப்பதற்கு முன்பு விமான சிப்பந்தி உயிரிழப்பு. பின்பு அப்படியே வணிகத்தை மாற்றி சதுப்பான நிலங்களை குப்பை கொட்டி, கூட கொஞ்சம் அரசாங்க நிலத்தை வளைத்து போட்டு ஆரம்பித்த வணிகம் தான் பிலிம் சிட்டி . இங்கு நடந்த சமீப விபத்தும் அந்த கிரேன் வெயிட்
தாங்கும் அளவுக்கு நிலத்தின் மண்
தன்மை சரியில்லை. அந்த கிரேனை முதன் முதலில் 100 % அளவுக்கு பயன்படுத்துவதே தப்பு. அப்படி செய்து அந்த லைட்டை இறக்கி ரொட்டேட் செய்து இடம் மாற்றாமல், அப்படியே திருப்பிய வகையில் மண் அந்த திடீர் அசைவை எதிர்கொள்ள முடியாமல் அப்படியே சாய்ந்து பல பேர் காயம், 3 உயிர் போன பரிதாபம்.
அடுத்து சங்கர் – இவர் ஒரு வினோத மனிதர் – இவர் படம் எடுத்தால் அதிகபட்சம் ரெண்டு கோடி அல்லது மூன்று கோடி என செலவழிப்பார். அவர் இயக்கம் படத்துக்கு ஒரு காட்சிக்கு அதே ரெண்டு கோடி, மூன்று கோடி என செலவழித்து இந்த மாதிரி தேவை இல்லாத ஆணியெல்லாம் புடுங்கி, ஏற்கனவே ‘அந்நியன்’ படத்தில் ஆறு ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஒரே நேரத்தில் மரணித்த விஷயம் வெளியில் பல பேருக்கு தெரியாது – பின்பு நீச்சல் குளம் சாவு – இப்போது மூன்று பேர் மரணம் .
ஒரு டைரக்டர் தான் கேப்டன் – அவர் இல்லாமல் அணுவும் அசையாது – அவரின் இந்த மாதிரி குறுக்கு வழி வேலைகள் தான் இந்த மாதிரி விபத்துக்களுக்கு காரணம். ஏன் என்றால் இந்த மாதிரி லைட்டிங் ‘பேட் மென்’ படத்தில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு – அனால் அதை செய்ய கிரேன் உபயோகப்படுத்த மாட்டார்கள். அதற்கு பதில் scuffholding அல்லது சாரம் அமைத்து தான் செய்ய வேண்டும்.
அதை செய்யாமல் இந்த மாதிரி ஷார்ட் கேட் வேலை செய்து இன்னும் பல உயிரை வாங்கிய வகையில் சங்கர் மட்டுமே தனி சிறப்பானவர். இவர் இவ்வளவு மெனக்கெடுத்து பல உயிரை வாங்கிய இவரை வைத்து கோடி கோடியாய் பணம் போட்டு நல்ல நிலையில் உள்ள ஒரு தயாரிப்பாளரை நீங்கள் காட்டினால் போதும் நான் தலை வணங்குகிறேன்……….!
வழக்கம் போல இந்த சாவுகளும் மறக்கப்படிக்கப்பட்டது வேதனையே………….!
From Ravi Nag fb.