இம்மாத இறுதியில் கோவையில் தொடங்குவதாக இருந்த சி\ம்புவின் ‘மாநாடு’படப்பிடிப்பு திடீரென இன்று சென்னையில் துவங்கியது.
வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’.இப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா,எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன்,மனோஜ் பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல்.
இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று தொடங்கப்பட்டுள்ளது.தியாகராயநகரில் முதல்நாள் படப்பிடிப்பு பூசையுடன் தொடங்கியிருக்கிறது.சிம்பு, நாயகி கல்யாணி, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர், தயாரிப்பாளர் கலைப்புலிதாணு இயக்குநர் பாரதிராஜா, ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகிய பலர் பூசையில் கலந்துகொண்டனர்.
காலை ஒன்பது மணிக்கு பூசை அதைத் தொடர்ந்து அப்படியே படப்பிடிப்பு என்று சொல்லியிருந்தார்களாம்.அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் காலை எட்டே கால் மணிக்கே படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சிம்பு.இதனால் மிக உற்சாகமாக முதல்நாள் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். சிம்புவின் வாழ்நாளில் அவர் சொன்ன நேரத்துக்கு முன்பே ஷூட்டிங் வந்த முதல் சம்பவம் இதுதான் என்கிறார்கள்