கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

அவற்றைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.பிப்ரவரி 19 அன்று இரவு நடந்த படப்பிடிப்பின் போது ஒரு காட்சிக்காக கிரேன் அமைக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பிரம்மாண்ட விளக்கு ஒன்றை கிரேன் மீது வைத்ததால் எடை தாங்காமல் கிரேன் அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….

சொற்களில் அடங்காத துயரம் இது,பிப்ரவரி 19,2020 அன்று இந்தியன் 2 செட்டில் எதிர்பாராமல் நடந்துவிட்ட விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா,கலை இயக்குநரின் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய கடும் உழைப்பாளிகளை இழந்துவிட்டோம்.அவர்கள் குடும்பதினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஆனால் அவர்களுக்கு என்ன மாதிரியான இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து அந்நிறுவனம் மவுனம் காக்கிறது.

கமல் வெளியிட்ட அறிக்கையில்,…எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு பக்கம் இப்படத்தை துவங்கிய முதல் நாளிலிருந்தே தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருவதாலும் கமல் தனது கால்ஷீட்டை பிச்சைக்காரனுக்குப் போடுவது போல் பிச்சி பிச்சி தருவதாலும் பேசாமல் இப்படத்தை டிராப் செய்துவிடலாமா என்று யோசிக்கத் துவங்கியுள்ளதாம் லைகா.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.