ரஜினி கலவரத்தை பற்றிப் பேசுகிறார். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்கியிருக்க வேண்டும் என்கிறார். சி.ஏ.ஏவை மத்திய அரசு திரும்பப்பெறாது என்கிறார். இண்டெலிஜென்ஸ் ஃபெயிலியர் என்கிறார். அமைதி வழியில் போராடலாம் வன்முறையில் இறங்கக்கூடாது என்கிறார்.
ஒரு பத்திரிகையாளர் கேட்கிறார்” நீங்க சி.ஏ.ஏ க்கு எதிரா போராடினவர்களை ஒடுக்கவேண்டும் என்கிறீர்களா? அல்லது அமைதி வழியில் போராடியவர்களின் மேல் வன்முறை நடத்தியவர்களை ஒடுக்கச் சொல்கிறீர்களா?’ என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் இண்டெலிஜென்ஸ் ஃபெயிலியர் என்று முனகிவிட்டு கேட்டை சாத்திக்கொண்டு போகிறார். கலவரத்தை ஒடுக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டுபோங்கள் என்று ரஜினி சொல்வது கெஜ்ரிவாலையா அல்லது மோடியையா?
ஏதாவது புரிகிறதா? அமைதி வழியில் போராடலாமே தவிர வன்முறையில் ஈடுபடக்கூடாது எனச் சொல்வது கலவரம் செய்தவர்கள் சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள் என்று புரிந்துகொண்டிருக்கிறாரா?
இந்த உளறலை ஒரு வாரம் ராப்பகலாய் விடிய விடிய விவாதிக்க வேண்டுமா? அவர் பிரச்சினையை திசை திருப்ப மறுபடி வருகிறார்.
ரஜினி வெளிய வாங்கன்னு நான்தான் அழைத்தேன். வராமலே இருந்திருக்கலாம்.
முகநூலில் மனுஷ்யபுத்திரன்