தமிழில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’ , ‘சக்க போடு போடு ராஜா’, ’50/50′ ஆகிய படங்களில் நடித்தவர், பிரபல தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன்.

எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார்.அவருக்கு வயது 37 ஆகிறது.

நேற்று இரவு சென்னையிலுள்ள வீட்டில் இருந்த சேதுராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு 8.30 மணியளவில் சேதுராமன் மரணம் அடைந்தார்.

அவருக்கு மனைவி உமையாள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 2016, பிப்ரவரி 12 ஆம் தேதி சேதுராமன்,மென்பொருள் பொரியாளர் உமையாள் ஆகியோர் திருமணம் நடந்தது.

37 வயதில் மாரடைப்பு அதுவும் ஒரு மருத்துவருக்கே ஏற்பட்டிருக்கிறது என்பதால் திரையுலகத்தினர் மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் பேரரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.